(ஆர்.யசி)

நாட்டின் அவசரகால நிலைமைகளை கருத்தில் கொண்டு மக்களின்  பிரச்சினைகளை கருத்தில் கொள்ள அவசரமாக பாராளுமன்றத்தை கூட்ட வேண்டும் என கட்சி தலைவர்கள் கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளனர். அத்துடன் கொரோனா நாட்டின் அவசரகால நிலைமைகளை கருத்தில் கொண்டு மக்களின்  பிரச்சினைகளை கருத்தில் கொள்ள அவசரமாக பாராளுமன்றத்தை கூட்ட வேண்டும் என கட்சி தலைவர்கள் கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளனர். அத்துடன் கொரோனா தொற்றுநோய் பரவல் ஒரு தேசிய அனர்த்தமாக மாறியுள்ள நிலையில் சகல கட்சிகளையும் உள்ளடக்கிய சர்வகட்சிக்குழு ஒன்றினை உருவாக்கி தேசிய மட்டத்தில் இயங்கவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் அவசரகால நிலைமைகள் குறித்து ஆராயும் வகையில் அவசர கட்சி தலைவர்கள் கூட்டம் நேற்று பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ தலைமையில் கூடியது. நேற்று காலை 10 மணிக்கு அலரிமாளிகையில் கூடிய இக் கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு அரசியல் கட்சி உறுப்பினர் மட்டுமல்லாது சுகாதார துறை அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்ட விசேட பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

நாடளாவிய ரீதியில் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தின் அவசியம் மற்றும் சுகாதார சேவைகளை முன்னெடுப்பதில் அரசாங்கம் கையாளும் வேலைத்திட்டம் குறித்து நேற்றைய கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. நடைமுறை சுகாதார நிலைமைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது. அதேபோல் அரசியல் கட்சி உறுப்பினர்களால் பல யோசனைகளும் முன்வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடலுக்கு செல்லும் மீனவர்கள் ஊரடங்கு வேளையிலும் தமது படகுகளை கரைக்கு கொண்டு வரலாம். ஊரடங்கு முடியும்வரை காத்திருக்க தேவையில்லை என முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் நாளாந்தம் வேலைகளை செய்யும் மக்களுக்கான உரிய நிவாரணங்களை வழங்க வேண்டும் எனவும், தோட்டத்தொழிலாளர் மற்றும் விவசாயிகளுக்கான விசேட ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்படவேண்டும் என்ற கோரிக்கைகள் எதிர்க்கட்சியினரால் முன்வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் அனைவரும் முகக்கவசம் அணியவேண்டும் என்ற கோரிக்கை குறித்து வைத்தியத்துறையினர் முறையான தெளிவுகளை வழங்க வேண்டும். அனைவருக்கும் முகக் கவசம் அவசியமில்லை என சுகாதாரத் துறையினர் தெரிவித்து வருகின்றனர். அவ்வாறு இருக்கையில் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என வலியறுத்தும் கருத்துக்கள் குறித்து மக்கள் மத்தியில் முறையான தெளிவுபடுத்தலை முன்வைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் கொரோனா தொற்றுநோய் என்பது ஒரு தேசிய அனர்த்தமாக என கருத்தில் கொண்டு இதனை கையாளும் விதத்திலான தேசிய பொறிமுறை ஒன்றினை உருவாக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் சார்பில் கலந்துகொண்ட விஜித ஹேரத் முன்மொழிந்துள்ளார். இப்போது வரையில் கட்சிகள் தனித்தனியாக தமது வேலைத்திட்டங்களை செய்து வருகின்றது. அதற்கும்  அப்பால் கட்சி,மதம் இன பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்து அனைவரது ஆலோசனைகளை உள்ளடக்கிய விதத்திலான பொதுவான வேலைத்திட்டம் ஒன்றினை முன்னெடுக்கக் கூடிய பொறிமுறை ஒன்றினை உருவாக்க அரசாங்கம் முயற்சிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இதற்கு செவிமடுத்த பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ, இப்போதே கொரோனா பரவலை தடுப்பதற்கான தேசிய நடவடிக்கை மையம் ஒன்று உருவாக்கப்பட்டு அது வெற்றிகரமாக இயங்கியும் வருகின்றது. எனினும் நீங்கள் கூறும் காரணிகளை கருத்தில் கொண்டு அவ்வாறான பொது வேலைத்திட்டம் ஒன்றினை உருவாக்க நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். அதற்கமைய சர்வ கட்சிகள் குழு ஒன்றினை இயக்கவும் இணக்கம் காணப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தேயிலை கொழுந்து பறிக்கும் அல்லது இறப்பர் பால் வெட்டும் இடங்களில், தோட்ட தொழிலாளர்கள் ஒருவரிடம் இருந்து ஒருவர் கணிசமான இடைவெளி தூரத்தில் இருக்க வாய்ப்புள்ளது, ஆனால் பின்மாலையில் தாம் சேகரித்த விளை பொருட்களை, கொண்டு வந்து ஒப்படைக்கும் இடத்தில் கூட்டம் கூட வேண்டிவரும், இதன்போது பயன்படுத்த தொழிலாளர்களுக்கு முககவசம் வழங்க தோட்ட நிர்வாகங்கள் ஏற்பாடு செய்யவேண்டும்.  தொழிலாளர்களுக்கு சுகாதார முன்னெச்சரிக்கைகள் பற்றி பிரதேச சுகாதார களநிலை அதிகாரிகள் அறிவுரை பயிற்சிகள் வழங்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் வலியுறுத்தினார். பெருந்தோட்ட பகுதியல் இதுவரையில் கொரோனா அச்சுறுத்தல் பெரிய அளவில் காணப்படவில்லை. ஆனால், தோட்ட பிரதேசங்களில் இது பெரிய அளவில் ஊடுருவுமானால், பெரும் சவால் ஏற்படும் எனவும் அவர்  வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பதில் தெரிவித்த சுகாதார திணைக்கள பணிப்பாளர் நாயகம், தாம் இவை பற்றி உடன் கவனம் செலுத்துவதாக தெரிவித்திருந்தார்.

அதேபோல் சுமார் ஒரு இலட்சத்து ஐம்பதினாயிரம் தொழிலாளர்கள் வேலையிலும், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தோட்ட புறங்களில் வாழ்ந்து பிற தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களையும் சேர்த்து சுமார் ஆறு இலட்சம் பேர் அளவில் தோட்ட புறங்களில் வாழ்கிறார்கள். தோட்டதொழிலாளர்களின் தொழில் வருமானம் உறுதி செய்யப்பட்டாலும் கூட, தோட்ட புறங்களில் வாழும் அனைவருக்கும் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அவர்கள் வாழும் பிரதேசங்களிலேயே கிடைக்க வழி செய்யவேண்டும் எனவும் மனோ கணேசன் கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளார். இவற்றை கவனத்தில் எடுத்து செயற்படுவதாகவும், எந்த ஒரு பிரிவினராவது விடுபட்டு போனால், தனது கவனத்துக்கு கொண்டு வரும்படியும் பிரதமர் கூறினார்.

அத்துடன் நாட்டின் அவசரகால நிலைமைகளை கருத்தில் கொண்டு பாராளுமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்ஸின் தலைவர் ரவூப் ஹகீம் தெரிவித்துள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த ஆளும் கட்சி உறுப்பினர் உதய கம்மன்பில, தொற்றுநோய் பரவல் நிலைமைகளில் பாராளுமன்றத்தை கூட்டுவது ஏற்புடையதல்ல எனவும் தனது கருத்தை முன்வைத்துள்ளார்.  இதற்கு பதில் தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.எ.சுமந்திரன்:- நாட்டின் அவசரகால நிலைமையில் முதலில் பாராளுமன்றத்தை கூட்டியாக வேண்டும். மக்களின் பிரச்சினைகள் மற்றும் நாட்டின் அவசர நிலைமைகள் குறித்து கலந்துரையாடி ஒரு பொதுவான தீர்மானம் எடுக்க வழியில்லாது உள்ள நிலையில் பாராளுமன்றத்தை கூட்டுவதே முறையானது. பாராளுமன்றத்தை கூட்டுவதால் நோய் பரவல் ஏற்பட போவதாக கூறுவதை ஏற்றுகொள்ள முடியாது. பாராளுமன்றத்தை கூட்டினாலும் அனைவருமாக ஒன்றாக அமர்ந்து முரண்படத்தேவையில்லை. கட்சி தலைவர்கள் மாத்திரம் தீர்மானங்களை முன்னெடுத்து பாராளுமன்றத்தில் சமர்பித்து ஏதேனும் ஒரு வழிமுறையில் நிறைவேற்றிக்கொள்ள முடியும். இலத்திரனியல் தொழிநுட்ப முறைகளில் கூட சில செயற்பாடுகளை கையாள முடியும். அதற்கான வழிமுறைகள் அல்லாமளல்ல. அதுமட்டும் அல்ல, தேர்தல் திகதி குறித்த தீர்மானம் எடுக்கப்பட வேண்டும், பொது நிதி ஒதுக்கீடுகள் குறித்து தீர்மானம் எடுக்க வேண்டும். இவ்வாறான நிலைமையில் பாராளுமன்றம் இயங்குவதே முறையானதாகும். பாராளுமன்றம் கலைக்கப்பட்டாலும் கூட தேசிய அனர்த்தம் ஒன்றின் போது விசேடமாக பாராளுமன்றத்தை கூட்ட முடியும். அதனடிப்படையில் பாராளுமன்றத்தை கூட்டுங்கள் என வலியுறுத்தியுள்ளார்.

எனினும் அரச தரப்பில் இருந்து இதற்கான ஆரோக்கியமான பதில் எதுவும் முன்வைக்கப்படவில்லை. இந்நிலையில் மீண்டும் கருத்து முன்வைத்த எம்.எ.சுமந்திரன்:- பாராளுமன்றத்தை கூடும் வரையில் கட்சி தலைவர்கள் கூட்டத்தையேனும் தொடர்ச்சியாக கூட்ட வேண்டும். கட்சி தலைவர்கள் கூட்டத்தில் அவசர தீர்மானங்களை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதற்கு பிரதமர் உள்ளிட்ட அரச தரப்பினர் முழுமையாக இணக்கம் தெரிவித்துள்ளனர்.

  பரவல் ஒரு தேசிய அனர்த்தமாக மாறியுள்ள நிலையில் சகல கட்சிகளையும் உள்ளடக்கிய சர்வகட்சிக்குழு ஒன்றினை உருவாக்கி தேசிய மட்டத்தில் இயங்கவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.