நாடளாவிய ரீதியில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு சட்டத்தை மீறிய 3700 பேர் இன்று காலை 6 மணி வரையிலான 60 மணி நேர காலப்பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சந்தேக நபர்களுக்கு மேலதிகமாக மோட்டார் சைக்கிள் , முச்சக்கர வண்டிகள் உட்பட 715 வாகனங்களும் பொலிஸரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த காலப்பகுதியில் அதனை மீறி செயற்பட்டமை தொடர்பிலே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.