அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் டொனால்ட் டிரம்பை துப்பாக்கியால் சுட முயற்சி இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் பதவிக்காலம் விரைவில் முடிவதால் எதிர்வரும் நவம்பர் மாதம் 8 ஆம் திகதி அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.

 இந்த தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக பிரபல தொழிலதிபரான டொனால்ட் டிரம்ப்புடன் குடியரசுக் கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபரின் மனைவி ஹிலாரி கிளிண்டன் மோதுகிறார்.

இந்நிலையில், லொஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற ஜனநாயகக் கட்சியின் பிரச்சார நிகழ்ச்சியில் கடந்த சனிக்கிழமை டொனால்ட் டிரம்ப் பங்கேற்றார். இந்த கூட்டத்தில் பெருந்திரளானோர் திரண்டிருந்தனர். 

இதன்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவரின் துப்பாக்கியை எடுத்து டொனால்ட் டிரம்ப்பை கொலை செய் முயற்சி செய்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்தில் இருந்த பொலிஸார் குறித்த இளைஞரை மடக்கி பிடித்துள்ளனர்.

20 வயதுடைய பிரித்தானி நாட்டைச் சேர்ந்த மைக்கல் சான்ட்போர்ட் என்ற இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

 டிரம்ப்பை கொலை செய்யும் திட்டத்துடன் 18 மாதங்களுக்கு முன்னர் இங்கிலாந்தில் இருந்து அமெரிக்காவுக்கு சென்ற மைக்கேல், நியூ ஜெர்சி, கலிபோர்னியா ஆகிய பகுதிகளில் வசித்து வந்துள்ளார். 

லொஸ் வேகாஸ் பிரச்சார கூட்டத்தின்போது டிரம்ப்பை  கொலை செய்யும் திட்டத்துடன் கலிபோர்னியாவில் இருந்து அலாஸ் வேகாஸ் நகருக்கு மைக்கேல் காரில் வந்துள்ளார். 

டொனால்ட் டிரம்ப்பின் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்க அனுமதி சீட்டை வாங்கிய மைக்கேல், இதற்குமுன்னர் துப்பாக்கியை பயன்படுத்திய அனுபவம் இல்லை என்பதால் கடந்த வெள்ளிக்கிழமை துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்துக்கு சென்று, அங்கு துப்பாக்கி சுடுவதற்கு பயிற்சி மேற்கொண்டுள்ளார்.

ஒருவேளை, லொஸ் வேகாஸ் நகரில் தனது திட்டம் தோல்வியுற்றால் பீனிக்ஸ் நகரில் நடைபெறவிருந்த டிரம்ப்பின் அடுத்த பிரச்சாரக் கூட்டத்தில்   கொலை செய்யும் எண்ணத்தில்   பிரச்சார கூட்டத்துக்கான அனுமதி சீட்டையும் மைக்கேல் வாங்கி வைத்துள்ளார்.

லொஸ் வேகாஸ் நகரில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற டொனால்ட் டிரம்ப்பின் பிரச்சார நிகழ்ச்சியில்  பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகம் இருந்ததால் ஆயுதம் எதுவும் இன்றி உள்ளே நுழைந்த மைக்கேல், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உயரதிகாரியான அமீல் ஜேக்கப் என்பவரின் துப்பாக்கியை எடுத்ததாக  மைக்கேல் வாக்குமூலமளித்துள்ளார்.

இதேவேளை தான் விடுதலை பெற்றால் மீண்டும் டிரம்ப்பை கொலை செய்ய முயற்சிப்பேன் என மைக்கேல் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கும் பொலிஸார் குறித்த நபருக்கு எதிராக நீதிமன்றில் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.