2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளானது அடுத்த ஆண்டு வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.

அதன்படி டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை அடுத்த ஆண்டு நடத்துவதற்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தோமஸ் பாக் உடன் இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இன்றைய தினம் தெரிவித்துள்ளார்.

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை 

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை ஜூலை 24 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் கொரோனா அச்சம் காரணமாக ஒலிம்பிக் போட்டிகளை தள்ளிவைக்க வேண்டுமென்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகள் கோரிக்கைள் வைத்தது.

கனடாவும், அவுஸ்திரேலியாவும் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கள் நாட்டு வீரர்கள் பங்கேற்கமாட்டார்கள் என அறிவித்திருந்தது.

இதுதொடர்பாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியும், ஜப்பான் ஒலிம்பிக் சங்கமும் தீவிர ஆலோசனை நடத்தினர். போட்டிகளை நடத்துவது, வீரர்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தி தருவது, உலகமெங்கும் போட்டியை காண வரும் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கலமா உள்ளிட்டவை குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது.

இந் நிலையிலேயே தற்போது ஒலிம்பிக் போட்டிகளை அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடத்துவதற்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவருடன் இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக ஜப்பான் பிரதமர் தெரிவித்துள்ளார்.