கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்கள் கொரோனா வைரஸ் எச்சரிக்கை வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

சற்று முன்னர் ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள உடக அறிக்கையிலேயே மேற்கண்ட தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மறு அறிவித்தல் வரும் வரையில் குறித்த மாவட்டங்களுக்கான பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என்றும் அந்த ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.