(செ.தேன்மொழி)

வடமாகணம் மற்றும் கொழும்பு , புத்தளம் , கம்பஹா மாவட்டங்களுக்கு அமுல் படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் இன்று செவ்வாய்கிழமைகாலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு அமுல் படுத்தப்பட உள்ளது.

இவ் ஊரடங்குச் சட்டம் வெள்ளிக்கிழமை காலை 6 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் நோக்கில் அரசாங்கம் நாடளாவிய ரீதியில் கடந்த வெள்ளிக்கிழவம ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தியிருந்தது.

இந்நிலையில் வடமாகாணம் மற்றும் கொழும்பு கம்பாஹா, புத்தளம்  உள்ளிட்ட மாவட்டங்களை தவிர்த்து ஏனைய மாவட்டங்களுக்கு திங்கட்கிழமை காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் பிற்பகல் 2 மணிமுதல் வியாழக்கிழமை காலை 6 மணிவரை மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய கொழும்பு, கம்பஹா, புத்தளம் மற்றும் வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு,  யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்டகளுக்காண ஊரடங்குச் சட்டம் இன்று காலை ஆறு மணிவரை அமுல் படுத்தப்பட்டிருந்தது.

குறித்த பகுதிகளில் காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்குச் சட்டத்தை பிற்பகல் 12 மணிக்கு மீண்டும் அமுல்படுத்துவதாக அரசாங்கம் தெரிவித்திருந்த போதும். அதனை பிற்பகல் 2 மணிவரை நிடித்திருந்தது. இந்த பகுதிகளில் உள்ள மக்கள் தமது அத்தியவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.

இதேவேளை இந்தக் காலப்பகுதியில் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வர்த்தக நிலையங்களுக்கு வருகைத்ததும் இறுதி நுகர்வோர்கள் தமக்கு தேவையான பொருட்களை பெற்றுக்கொள்ளும் வரையிலும் வர்த்தக நிலையங்களை திறந்து வைப்பதற்கு வர்த்தக நிலையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பிற்பகல் 2 மணியின் பின்னர் குறித்த பகுதிகளில் மீண்டும் ஊரடங்குச் சட்டத்தை அமுல் படுத்துவதாகவும் அதனை வெள்ளிக்கிழமை காலை 6 மணிவரை அமுல் படுத்த உள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்தது.