இலங்கை விமானப் படையின் முன்னாள் தளபதி ரோஷான் குணதிலக்க மேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சற்று நேரத்திற்கு முன்னர் ரோஷான் குணதிலக்க மேல் மாகாண ஆளுனராக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப் பிரமானம் செய்து கொண்டார்.

ரோஷான் குணதிலக்க இலங்கை விமானப் படையினர் 12 ஆவது தளபதியாகவும், பாதுகாப்புத் படைத் தலைமை அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.

மேல் மாகாண ஆளுநராகவிருந்த சீதா ஆரம்பொல கடந்த வாரம் தனது பதவியை இராஜினாமா செய்துள்ள நிலையிலேயே ரோஷான் குணதிலக்க இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.