வெளிநாடுகளிலிருந்து வருகைதந்திருந்து, கொரோனா தடுப்பு முகாம்களில் இருந்த 311 பேர் வெளியேற்றம்

Published By: Digital Desk 8

24 Mar, 2020 | 12:05 PM
image

கொரோனா தொற்றுக்குள்ளாகி வெளிநாடுகளிலிருந்து வருகைதந்து இலங்கையில் தனிமைப்படுத்தல் நிலையங்களில் சிகிச்சை பெற்றுவந்த முதலாவது குழு அந்தந்த தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர்.

வெளிநாடுகளிலிருந்து வருகைதந்த 311 பேர் அடங்கிய குழுவொன்றே இவ்வாறு தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்து வெளியேறியதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்தார். இத்தாலி, ஈரான் மற்றும் தென்கொரியாவில் இருந்து வருகை தந்தவர்களே இவ்வாறு சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளனர்.

கந்தகாடு தடுப்பு முகாமிலிருந்து 108 பேரும், புனானை தடுப்பு முகாமில் இருந்து 203 பேரும் இவ்வாறு வெளியேறியுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இவர்கள் கண்டி, மாத்தறை மற்றும் காலி ஆகிய இடங்களுக்கு இராணுவத்தினரின் தலையீட்டில் விசேட பஸ் வண்டிகளில் அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.

அவர்களுக்கு தேவையான மதிய உணவு உள்ளிட்ட உணவு பொருட்களை பெற்றுக்கொடுக்க உள்ளதாகவும் இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடதக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Update; யாழில் இருந்து பாலை தீவு...

2026-03-06 12:50:23
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2026-03-06 12:49:11
news-image

2026/2027 ஆம் ஆண்டுக்கான உயர்தர தொழிற்கல்விப்...

2026-03-06 13:00:44
news-image

யாழில் இருந்து பாலை தீவு சென்ற...

2026-03-06 12:42:10
news-image

அரச சேவையின் சம்பள முரண்பாடுகளைத் தீர்க்க...

2026-03-06 12:37:11
news-image

கிணற்றில் விழுந்த யானையும் குட்டியும் பாதுகாப்பாக...

2026-03-06 12:20:49
news-image

மதுரங்குளியில் விபத்து ; மாணவர்கள் இருவர்...

2026-03-06 11:19:19
news-image

கட்டுநாயக்கவில் 11 கிலோ போதைப்பொருளுடன் ஒருவர்...

2026-03-06 10:52:42
news-image

உலகளாவிய ரீதியில் கப்பல் போக்குவரத்து செலவுகள்...

2026-03-06 10:43:17
news-image

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு: 6...

2026-03-06 10:52:21
news-image

மட்டுப்படுத்தப்பட்ட விமான சேவைகளை ஆரம்பித்தது ஐக்கிய...

2026-03-06 11:13:50
news-image

ரைசினா கலந்துரையாடலில் விஜித ஹேரத் பங்கேற்பு 

2026-03-06 09:07:22