(ஆர்.ராம்)

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக அனைத்து விதமான விமானங்கள் உள்வருகைக்கான தடையை எதிவர்ரும் 31ஆம் திகதி வரையில் நீடிப்பதாக சிவில் விமான போக்குவரத்து அதிகாரபை அறிவித்துள்ளது.

அதேநேரம், இலங்கையிலிருந்து வெளிச்செல்லும் பயணிகளையும், திரும்பிச் செல்லும் சுற்றுலாப்பயணிகளையும் உரிய சந்தர்ப்பங்களில் பயணிப்பதற்கான அனுமதி அளிக்கப்படும் என்றும் அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, அவசரமாக  திசைத்திருப்பப்பட்ட விமானங்கள், சரக்கு விமானங்கள், தொழில்நுட்ப கோளாறுக்குட்பட்ட விமானங்களின் தரையிறக்கங்கள் மற்றும் உள்வரும் படகு விமானங்கள் ஆகியவற்றுக்கு மனிதாபிமான அடிப்படையில் அனுமதி அளிக்கப்படும் என்றும் அதிகாரசபை கூறியுள்ளது.

அத்துடன் ஏனைய பகுதிகளுக்கு பயணம் செய்வதற்காக விமான நிலையத்தில் தரித்துச் செல்லும் சகல பயணிகள் மற்றும் விமானங்களுக்கு ஆறு மணிநேர கால அவகாசம் மட்டுமே வழங்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவை கட்டப்படுத்துவதற்காக கடந்த19ஆம் திகதி முதல் நாளை வரையில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டுவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்தியாவிற்கு சென்ற யாத்திரிகர்கள் மட்டும் விசேட விமானம் மூலம் அழைத்து வரப்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.