யாழ்.மாவட்டத்தில் 1729 நபா்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனா். 192 நபா்கள் அரியாலை தேவாலயத்தில் நடந்த ஆராதனையில் கலந்து கொண்டிருக்கின்றனா். 80 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு கடுமையாக கண்காணிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது.
மேலும் யாழ்.தாவடி கிராமத்தில் சுமாா் 300 குடும்பங்களை உள்ளடக்கியதான ஒரு பகுதி முற்றாக முடக்கப்பட்டிருக்கின்றது. எனவே மக்கள் விழிப்புணா்வு ஆலோசனைகளை பின்பற்றி மிக அவதானமாக நடந்து கொள்ளுமாறு நாங்கள் கோரிக்கை விடுக்கிறோம்.
மேற்கண்டவாறு யாழ்.மாவட்ட செயலா் க.மகேஷன் கூறியுள்ளாா். யாழ்.மாவட்டத்தில் தற்போது கொரோனா நிலமை தொடா்பாக ஊடகங்களுக்கு இன்று மாலை கருத்து தெரிவிக்கும்போதே அவா் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றாா்.
அவா் கூறுகையில், யாழ்.மாவட்டத்தில் ஒருவா் கொரோனா தொற்றுடன் இனங்காணப்பட்டிருக்கின்றாா். இதனடிப்படையில் 1729 போ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். அாியாலை பகுதியில் மட்டும் 192 நபா்களும் 80 வீடுகளும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டிருக்கின்றது.
அதேபோல் கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டிருக்கும் தாவடி கிராமத்தின் ஒரு பகுதி முற்றாக முடக்கப்பட்டிருக்கின்றது. மேலும் ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டிருக்கின்றது. மக்கள் விழிப்புணா்வுடன் செயற்படுவதால் நோய் பரவலை தடுக்கலாம்.
அதேபோல் ஊரடங்கு மேலும் 2 அல்லது 3 வாரங்களுக்கு நீடிக்கப்படலாம். எனவே மக்கள் அவதானமாக இருக்கவேண்டும். தமக்கு தேவையான உதவிகளை மக்கள் தமது பிரதேச செயலா் ஊடாக தொடா்பு கொண்டு உதவிகளை பெற்றுக் கொள்ளலாம்.
வெதுப்பக பொருட்களை விநியோகம் செய்ய இன்று காலை நடவடிக்கை எடுத்தோம். அதனை மாலையிலும் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எமது முயற்சி வெற்றியளித்துள்ளது. மேலும் மருந்துகளையும் விநியோகிக்க நடவடிக்கை எடுத்திருப்பதுடன், அத்தியாவசிய உணவு பொருட்களையும் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். அதேபோல் பிரதேச செயலா்கள் ஊடாக 64 ஆயிரம் குடும்பங்களை இனங்கண்டிருக்கிறோம். அவா்களுக்கு உலா் உணவு விநியோகிக்க நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.
மேலும் அனா்த்த முகாமைத்துவ பிரிவு ஊடாக 1 மில்லியன் ரூபாய் நிதியை வழங்க அந்த அமைச்சு இணங்கியுள்ளது. மேலும் பிரதமா் ஊடாக மாவட்டத்திற்கு 1 மில்லியன் வழங்கவும் இணக்கம் காணப்பட்டிருக்கின்றது. எனவே மக்களுக்கான உதவிகள் கிடைக்கும், மக்கள் விழிப்பாக இருப்பதுடன், நோய் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM