கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஐந்து பேர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் இலங்கையில் மொத்தமாக கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளவர்களின் எண்ணிக்கையானது 91 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இன்றையதினம் இலங்கையில் முதலாவதாக கொரோனா தொற்றுக்கு இலக்கான சுற்றுலா வழிகாட்டியான நபர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.