யாழில் தாராளமாக அத்தியாவசியப் பொருட்கள் உள்ளன : குடும்பதிலிருந்து ஒருவர் மாத்திரம் வருக - யாழ்.வணிகர் கழகம்

23 Mar, 2020 | 04:49 PM
image

(தி.சோபிதன்)

யாழ்ப்பாண மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் தாரளமாக உள்ளது என தெரிவித்துள்ள யாழ்.வணிகர் கழக உப தலைவர் ஜெயசேகரம் வர்த்தக நிலையங்களுக்கு குடும்பத்தில் இருந்து ஒருவர் மட்டும் வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாண மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கொழும்பில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன. எனவே மக்கள் வீணாக குழப்பங்கள் அடைய வேண்டாம். மேலும் நாளைய தினம் ஊரடங்கு சட்டம் காலையில் எடுக்கப்பட்டவுடனேயே அனைத்து வர்த்தக நிலையங்களும் திறக்கப்படும்.

பொதுமக்கள் அனைவரும் ஒரே நேரத்தில் ஒன்று கூட வேண்டாம். குடும்பத்தில் இருந்து ஒருவர் வீதம் வருகை தந்து தேவையான பொருட்களை வாங்கி செல்லுங்கள். அத்துடன் வர்த்தக நிலையத்திற்கு வருகை தரும் அனைவரும் தனி நபர் சுகாதாரத்தை பேணிக் கொள்ளுங்கள்.

குறிப்பாக மக்கள் பொருட்களை வாங்கும் போது நெருக்கமாக நிற்காது இடைவெளி விட்டு நில்லுங்கள்.தேவையான பொருட்கள் தாரளமாக இருப்பதால் மக்கள் வீண் அச்சம் கொள்ள வேண்டாம்.

யாழ்ப்பான வர்த்தகர்கள் கொழும்புக்கு சென்று தேவையான பொருட்களை எடுத்து வர அவர்களுக்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக பாரவூர்த்திகளுக்கு பாஸ் நடைமுறைகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.

வர்த்தகர்கள் தேவையான பொருட்களை எடுத்து வருகின்றனர்.மக்கள் இவற்றை கருத்தில் கொண்டு நாட்டில் ஏற்பட்டுள்ள நோய்த்தக்கதில் இருந்து அனைவரும் பாதுகாப்பாக இருப்போம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரத்தினபுரியில் வெப்பநிலை அதிகரிப்பு

2024-02-24 09:18:59
news-image

மட்டக்களப்பு வாகனேரியில் மாமியாரை அடித்து கொலை...

2024-02-24 08:52:35
news-image

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த...

2024-02-24 07:36:47
news-image

சாந்தனை இலங்கைக்கு அனுப்ப இந்திய மத்திய...

2024-02-24 07:12:23
news-image

இன்றைய வானிலை 

2024-02-24 07:19:01
news-image

தடைகளை மீறி சிவசேனை மறவன்புலவு சச்சிதானந்தன்...

2024-02-24 07:21:28
news-image

வெற்றிலைக்கேணியில் விபத்து : செய்தி சேகரிக்க...

2024-02-24 00:29:49
news-image

நாட்டின் தேசிய அடையாளம், சட்டத்தின் ஆட்சியை...

2024-02-23 22:05:26
news-image

பிரதான எதிரியான ஜனாதிபதி ரணிலை வீழ்த்த...

2024-02-23 22:07:18
news-image

துபாய் இரவு விடுதியில் மோதல்: 13...

2024-02-23 22:07:27
news-image

சீன நகரில் 100 வாகனங்கள் ஒன்றுடன்...

2024-02-23 21:44:19
news-image

குவைத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இலங்கையர்...

2024-02-23 20:58:08