அதிக போட்டி விலையில் காணப்­ப­டு­கின்ற பெற்­றோ­லை நியா­ய­மான விலையில் இலங்­கைக்கு எம்மால் வழங்க முடியும். ஆபி­ரிக்­காவின் முன்­றா­வது பெரிய பெற்றோல் வழங்­கு­னரான சூடான்தனது நாட்டின் பெற்றோல் ஆய்­வு­க­ளினை மேற்­கொள்­வ­தற்கு இலங்­கைக்கு அரிய சந்­தர்ப்­பத்­தினை வழங்­கி­யுள்­ள­தாக புது­டில்­லியை தள­மாகக் கொண்டு செயற்­படும் இலங்­கைக்­கான சூடான் தூதுவர் ஈ. எல். தாலிப் தெரிவித்தார்.

அண்­மையில் கைத்­தொழில் மற்றும் வர்த்­தக அமைச்சர் ரிஷாட் பதி­யு­தீ­னுடன் இடம்பெற்ற விசேட கலந்­து­ரை­யா­டலில் அவர் இதனை தெரிவித்தார். இந்த கலந்­து­ரை­யாலில் சூடான் மற்றும் வர்த்­தக அமைச்சின் உத்­திேயா­க­பூர்வ அரச அதி­கா­ரி­களும் கலந்­து­கொண்­டனர்.

இக் கலந்­து­ரை­யாலில் சூடான் தூதுவர் ஈ.எல் தாலீப் மேலும் கருத்து தெரிவிக்­கையில் ஆபி­ரிக்கக் கண்­டத்தில் பரப்­ப­ளவில் மிகப்­பெ­ரிய நாடும் வளம் மிக்க நாடும் சூடா­னாகும். இதன் தலை­ந­கரம் கார்டூம். இது ஆபி­ரிக்­காவின் மிகவும் நவீ­ன­மான பாது­காப்­பான தலை­ந­க­ரங்­களில் ஒன்று. நன்கு பயிற்சி பெற்ற எண்ணெய் தொடர்­பான ஆய்வு திறன் கொண்­ட­வர்கள் இங்கு வேலை செய்­கின்­றனர். அதிக போட்டி விலையில் காணப்­ப­டு­கின்ற பெற்­றோ­லினை நியா­ய­மான விலையில் இலங்­கைக்கு எம்மால் வழங்க முடியும். 1970 ஆம் ஆண்டு தெற்கு சூடான் பகு­தியில் இருந்தே நாங்கள் எண்ணெய் ஆய்­வினை தொடங்­கி­னோம்.

எமது பிர­தே­சத்தில் எண்ணெய் வளம் அதி­க­மாக உள்­ளது. ஏற்­க­னவே சீன, மலே­சிய பொறி­யா­ளர்கள் புதிய செயற்­கைக்கோள் தொழில்­நுட்­பங்­களை பயன்­ப­டுத்தி ஆய்­வு­களை மேற்­கொண்டு புதிய எண்ணெய் வள வைப்­புக்­களை கண்­டு­பி­டித்­துள்­ளனர்.

உண்­மையில், பெரிய பெற்றோல் ஏரி­களை எடுத்­துக்­கொண்டால் சூடானே முன்­னி­லையில் உள்­ளது என்று நாம் கண்­டு­பி­டித்­துள்ளோம். இப்­போது உல­க­ளவில் கச்­சாவை எடுத்­துக்­கொண்டால் எம்மை விட சவூதி அரே­பி­யாவில் மட்­டுமே பெரி­ய­ளவில் கச்சா வள வைப்பு உள்­ளது என சுட்­டிக்­காட்ட வேண்டும். எங்கள் கச்சா மிகவும் சுத்­த­மா­னது. நாம் பெரும்­பாலும் பெற்றோல் உற்­பத்தி மற்றும் ஏற்­று­மதி செயற்­பா­டு­களில் ஈடு­பட்டு வரு­கின்றோம். எம்­மிடம் டீசல் இல்லை.

இலங்கை அர­சாங்­கமோ அல்­லது இலங்­கையின் எந்­த­வொரு நிறு­வ­னங்­க­ளுமோ சூடானின் தூய்மை பெற்­றோ­லினை பெற்­றுக்­­கொள்ள முடியும்.

நாங்கள் பெற்­றோ­லினை மிகவும் நியா­ய­மான விலையில் வழங்க தயா­ராக உள்ளோம். மிகவும் முக்­கி­ய­மா­னது என்­ன­வென்றால் சூடானில் எண்ணெய் ஆய்­வு­களில் முத­லீடு செய்தல், ஆய்வு தொகு­தி­களை வாங்­குதல், எண்ணெய் பிரித்­தெ­டுத்தல், சுத்­தி­க­ரித்தல் மற்றும் சூடானில் இருந்து நேர­டி­யாக ஏற்­று­மதி செய்­ப­வர்­க­ளுக்கு எம்மால் உத­வி­களை வழங்க முடி­யும்.

எங்கள் நாட்டு பெறறோ­லிய அமைச்சின் வழ­மை­யான ஏலத்தில் உங்கள் அர­சாங்­கத்­தையும் தனியார் துறை­யி­ன­ரையும் பங்­கேற்­றுக்­கொள்ளும்படி நாம் அழைக்­கின்றோம். இலங்கை தனது பெறறோலி­யத்­தினை தாமே உரு­வாக்­கு­வ­தென்றால் சூடா­னுக்கு வந்து எங்கள் நாட்டு எண்ணெய் தொகு­தி­க­ளினை பெற்று பின்பு பிரித்­தெ­டுத்து சுத்­தி­க­ரித்து முழு­மை­யாக இலங்­கைக்கு அனுப்ப முடியும். இதற்கு தேவை­யான உத­வி­களை நாம் வழங்­குவோம். அத்­துடன் உயர் நியா­ய­மான விலை­யி­னை நிர்­ணை­யிப்­ப­தற்கும் உத­வி­பு­ரிவோம். சீனா, மலே­சியா, இந்­தியா போன்ற நாடுகள் ஏற்­க­னவே தமது சொந்த நிறு­வ­னங்­க­ளினை எமது நாட்டில் நிறு­வி­யுள்­ளன.இங்கு இவர்கள் தமது ஆய்­வுகள், உற்­பத்­திகள் மற்றும் ஏற்­று­ம­தி­யினை இங்­கி­ருந்த வண்ணம் அவர்­களின் நாட்­டிற்கு அனுப்பு­கின்­றனர். இவர்­க­ளு­டைய விலைகளும் சர்­வ­தேச விலை­க­ளுக்கு ஒத்­த­தா­கவே காணப்­ப­டு­கின்­றன. இவ்­வ­ருட இறு­திக்குள் எண்ணெய் விலை சாதா­ரண விலைக்கு திரும்­பினால் சூடானும் உல­க­ளவில் சிறந்த எண்ணை ஏற்­று­ம­தி­யா­ளா­ராக திகழும்.

பல சர்­வ­தேச எண்ணெய் உற்­பத்தி­யா­ளர்கள் தங்கள் சொந்த எண்­ணெயை சூடானில் உரு­வாக்­கு­கின்றனர். இவ் சர்­வ­தேச உற்­பத்­தி­யா­ளர்­களின் மத்­தியில் இந்­திய எண்ணெய் மற்றும் இயற்கை எரி­வாயு நிறு­வ­னத்­திற்கு சொந்­த­மான விதேஷ் லிமிடெட், முன்­னி­லையில் இருக்­கின்­றது. எண்ணெய் மற்றும் இயற்கை எரி­வாயு நிறு­வனம் இந்­தியப் பொதுத்­துறை பெற்றோலிய நிறு­வனம் ஆகும். இது இந்­தி­யாவில் அதி­க­மாக இலாபம் ஈட்டும் நிறு­வ­ன­மாகும். இந்­நி­று­வனம் எண்­ணெயின் ஆய்­வுகள் மற்றும் உற்­பத்தி தொடர்­பு­டைய நிறு­வ­னங்­களில் ஆசி­யாவின் மிகப்­பெ­ரிய மற்றும் மிகவும் இயக்­கத்தில் உள்ள நிறு­வ­னங்­களில் ஒன்­றாகும்.

எதிர்­வரும் ஜுலை மாதம் சூடான் - கார்­டூமில் நடை­பெ­ற­வுள்ள தொழில்­துறை மாநாட்­டிற்கு இலங்கை வர்த்­தக அமைச்சர் ரிஷாட் பதி­யு­தீனை கலந்­து­கொள்ளும் படி நாம் அழைப்பு விடு­விக்­கின்றோம். அங்கு நாம் இரு­த­ரப்பு வர்த்­தக பேச்சுவார்த்­தை­க­ளினை மேற்­கொள்­ளலாம். அத்­துடன் இலங்­கை­யோடு சலு­கை­யு­ட­னான வர்த்­தக உடன்­ப­டிக்­கை­க­ளினை மேற்கொள்­வ­தற்கும் நாம் ஆர்­வமாக இருக்­கின்றோம் என தெரிவித்தார்.