இந்­திய கிரிக்கெட் அணி உறுப்­பினர் யாரும் பாலியல் வழக்கில் சிக்­க­வில்லை என்று இந்­திய கிரிக்கெட் சபைத் தலைவர் அனுராக் தாகூர் தெரி­வித்­துள்ளார்.

இந்­திய கிரிக்கெட் அணி தற்போது சிம்பாப்வேயில் விளையாடி வருகிறது. போட்டிகள் அனைத்தும் ஹரா­ரேயில் நடை­பெ­று­வதால் அங்­குள்ள நட்­சத்­திர ஹோட்ட லில் இந்­திய வீரர்கள் அனை­வரும் தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

இத­னி­டையே, அந்த ஹோட்ட லில் தங்­கி­யி­ருந்த இந்­திய கிரிக்கெட் வீரர் ஒருவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டார் என்று சிம்­பாப்வே பெண் ஒருவர் புகார் அளித்­துள்ளார். இந்த புகார் அடிப்­ப­டையில் இந்­திய கிரிக்கெட் வீரர் ஒருவர் கைது செய்­யப்­பட்­டுள்ளார் என்று செய்­திகள் வெளி­யா­கின. இதனால் பெரும் பர­ப­ரப்பு ஏற்­பட்­டது.

இந்­நி­லையில், இந்­திய கிரிக்கெட் அணி உறுப்­பி னர் யாரும் இதில் சிக்­க­வில்லை என்று இந்­திய கிரிக்கெட் சபைத் தலைவர் அனுராக் தாகூர் தெரி­வித்­துள்ளார்.