இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் புது டெல்லி, மும்பை, கொல்கத்தால், சென்னை மற்றும் பெங்களூரு உள்ளிட்ட 80 முக்கிய நகரங்களை மார்ச் 31 ஆம் திகதி வரை பூட்டப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள மகாராஷ்டிரா, கேரளா, டெல்லி, குஜராத், உத்தரப்பிரதேசம், ஹரியானா, கர்நாடகா, தெலுங்கானா, ராஜஸ்தான், ஆந்திரா, தமிழ்நாடு, பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர், லடாக், மேற்கு வங்கம், சண்டிகர், சத்தீஸ்கர், இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஒடிசா, புதுச்சேரி மற்றும் உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் மார்ச் 31 ஆம் திகதி வரை பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்தியா முழுவதம் ரயில்கள், மெட்ரோ மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான பஸ் சேவைகள் உள்ளிட்டவை நிறுத்தப்பட்டுள்ளன. 

பெரும்பாலான மாநிலங்களில், சந்தைகள், வணிக ஸ்தலங்கள், திரையரங்குகள், உடற்பயிற்சி மையங்கள் உள்ளிட்டவைகள் ஏற்கனவே மூடப்பட்டுள்ளன. 

மேலும், பல மாநிலங்கள் 5 பேருக்கு மேல் கூடுவதை தடைசெய்யும் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இதுவரை 425 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், 8 பேர் அதனால் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.