ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட வேளையில் விவசாயத்தை மேற்கொள்ள எவ்விதமான தடையும் இல்லை என்பதால் நுவரெலியா மாவட்ட விவசாயிகள் தமது விவசாய கடமையில் ஈடுபட்டு உள்ளனர் என்பதை காணகூடியதாக இருந்தது.

விஷேடமாக சுகாதார திணைக்களத்தின் பணிப்புரையின் படி ஒவ்வொரு விவசாயியும் மூன்று மீற்றர் தூரத்தில் இடைவெளி பகுதியில் தமது பணிகளை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது. நுவரெலியா, தலவாக்கலை, டயகம, அக்கரப்பத்தனை, பொகவந்தலாவை, ருவன்புர மற்றும் மஸ்கெலியா ஆகிய பகுதியில் உள்ள விவசாயிகளே தங்களது விவசாய பணிகளை முன்னெடுத்து வந்தனர்.