கடந்த வெள்ளிக்கிழமை 20.03.2020 மாலை 6 மணிக்கு நாடளாவிய ரீதியில் பிறப்பிக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்குச்சட்டமானது சில மாவட்டங்களில் இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி வடமாகாணத்தின் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார் மற்றும் கொழும்பு, புத்தளம் மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் பொலிஸ் ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டு மீண்டும் இன்று பிற்பகல் 2 மணிக்கு அமுல்படுத்தப்படவுள்ளது.

ஏனைய மாவட்டங்களில் நாளை 24 ஆம் திகதி காலை 6 மணிக்கு தளர்த்தப்படுமென ஏற்கனவே ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஊரடங்கு தளர்தப்பட்டுள்ள வேளையில் பொதுமக்கள் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி தமக்குத் தேவையான அத்தியாவசியப்பொருட்களை கொள்வனவு செய்வது உங்களுக்கும் நாட்டின் எதிர்கால பாதுகாப்புக்கும் மிகவும் பயனுள்ளது என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.