தமிழ் சினிமா மாபெரும் நடிகரை இழந்துள்ளது.

தமிழ் திரைப்பட நடிகர் விசு உடல்நலக் குறைவால் காலமானார். இவர், நடிகர் மட்டுமல்லாது பல்துறை கலைஞராவார். அதாவது, தமிழ்த் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தாவுமாவார். அத்தோடு நடிகர் கிஷ்மு இவரது சகோதரர் என்பதுவும் குறிப்பிடதக்கது.

1945-ம் ஆண்டு பிறந்த இவர் திரைப்படம் தவிர்த்து மேடை நாடகம், தொலைக்காட்சித் தொடர் பலவற்றிலும் நடித்துள்ளார்.

இவர் இயக்கிய சம்சாரம் அது மின்சாரம் திரைப்படம் பெரும்பாலான இந்திய மொழிகளில் மீண்டும் எடுக்கப்பட்டுள்ளது என்பது முக்கிய அம்சமாகும்.