வைரஸுக்கு எதிரான உலகின் போராட்டத்தில் தவறான உதாரணத்தை வகுக்கும் அமெரிக்கா

22 Mar, 2020 | 05:35 PM
image

பெய்ஜிங், மார்ச் 22 ( சின்ஹுவா ) குற்றத்தை சீனாவின் மீது சுமத்தி களங்கம் கற்பிப்பதன் மூலமாக  கொரோனாவைரஸுக்கு எதிரான உலகின் போராட்டத்தில் தவறான உதாரணமொன்றை அமெரிக்க அரசாங்கம் வகுத்துக்கொண்டிருக்கிறது.

   மிகவும் ஆபத்தான முறையில் வைரஸ் பரவல் தீவிரமடைந்திருக்கும் நிலையில், அமெரிக்க அரசாங்கம் உள்நாட்டில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தி தடுப்பதில் காட்டுகின்ற கவனத்தையும் விட கூடுதல் கவனத்தை சீனாவை விமர்சிப்பதிலேயே காட்டுகின்றது.கொரோனாவைரஸ் பரவலுக்கு  ஆதாரமற்ற பல்வேறு காரணங்களை கற்பிக்கின்ற அமெரிக்கா வெளிநாட்டவர்களுக்கு விரோதமான உணர்வின் தொனியிலும் இனவெறித்தனமாகவும்  பேசுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

     கொவிட் -- 19 கொரோனாவைரஸின் பிறப்பிடமாக சீனாவை இடையறாது குற்றஞ்சாட்டிக்கொண்டிருக்கும் வெள்ளைமாளிகை அரசியல்வாதிகள் பரவலைக் கட்டுப்படுத்த சீனா தாமதமாகவே நடவடிக்கைகளில் இறங்கியதாகவும் இந்த வைரஸை " சீனவைரஸ் " என்றும் " வூஹான் வைரஸ் " என்றும் வர்ணிப்பதை நியாயப்படுத்த போலியான தரவுகளையும் முன்வைக்கிறார்கள்.

   அமெரிக்காவில் வைரஸ் பரவல் கடுமையாக அதிகரித்திருக்கும் நிலையில், குற்றத்தை சீனா மீது சுமத்துவதில் வாஷிங்டன் அதன் சக்தியை விரயம் செயதுகொண்டிருக்கிறது.அத்துடன் தொடர்ந்து உலகளாவியரீதியில்  தீவிரமடைந்துகொண்டிருக்கும் வைரஸ் பரவலை தோற்கடிப்பதற்கு ஒருமைப்பாடும் ஒத்துழைப்புமே ஒரே வழி என்ற உண்மையையும் வெள்ளைமாளிகை அலட்சியம் செய்கிறது.

   ஜனவரி மூன்றாம் திகதியில் இருந்தே அமெரிக்காவில் வைரஸ் பரவல் நிலைவரத்தையும் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளையும் கிரமமான அடிப்படையில் சீனா அவதானித்துவந்திருக்கிறது.ஆனால், வைரஸுக்கு எதிரான உலகளாவிய போராட்டத்துக்கு சீனா அதன் பெறுமதியான நேரத்தை ஒதுக்கிச்செயற்பட்டுக்கொண்டிருப்பதை அமெரிக்கா அலட்சியம் செய்கிறது.

    வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் சீனா சாதித்திருக்கும் முன்னேற்றத்தை அதன் மீது சேறுபூசுவதன் மூலமாக நிராகரித்துவிட முடியாது. அவ்வாறு செய்வதன் மூலமாக அமெரிக்காவில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தவோ தடுக்கவோ முடியாது. மாறாக, சீனாவுக்கு எதிராக வசைபாடும் வெள்ளைமாளிகை அரசியல்வாதிகளை  அசிங்கமானவர்களாகவும் நியாயமற்றவர்களாகவும் உலகம் நோக்கவே அது வழிவகுக்கும்.

      அமெரிக்க அரசியல்வாதிகளின் அத்தகைய வெற்று ஆரவாரப்பேச்சுக்கள் வருட இறுதியில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கு பயன்படக்கூடும். வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் அமெரிக்க நிருவாகத்தின் இயலாமை கண்டு அதிருப்தியுற்றிருக்கும் வாக்காளர்களின் கவனத்தை திசைதிருப்புவதற்காக அமெரிக்க அரசியல்வாதிகள் தங்கள் பொறுப்பை அலட்சியம்செய்து சீனாவைக் குற்றஞ்சாட்டுகிறார்கள் போலும். இது அரசியல் சீரழிவையும் அமெரிக்க ஜனநாயகத்தின் மாயையையும் அம்பலப்படுத்துகிறது. பல அம்சங்களில் அமெரிக்க நிருவாகம் வைரஸுக்கு எதிரான உலகின் போராட்டத்தில் தவறான உதாரணத்தை வகுத்துக்கொண்டிருக்கிறது.

    வைரஸ் பரவல் ஆரம்பித்ததில் இருந்து சீனா ஒன்றிணைந்த முயற்சிகளை எடுத்துவருவதுடன் மிகவும் கடுமையான நடைமுறைகளை விரிவான முறையில் கடைப்பிடிக்கின்றது. அதன் நேர்மறையான விளைவுகளை இன்று தெளிவாகப் பார்க்கக்கூடியதாக இருக்கிறது.

   சீனாவில் வைரஸ் பரவலின் உச்சநிலை அண்மையில் கடந்துவிட்ட நிலையில், சீனா ஏனைய நாடுகளுக்கு உதவமுன்வந்திருக்கிறது. மருத்துவப் பரிசோதனைக்கான உபகரணங்கள், முகக்கவசங்கள், பாதுகாப்பு அங்கிகள் போன்ற உதவிகளை 82 நாடுகளுக்கும் உலக சுகாதார ஸதாபனம் மற்றும் ஆபிரி்க்க ஒன்றியத்துக்கும்  வழங்குவதாக சீனா அறிவித்திருக்கிறது.இந்த உதவி விநியோகங்களில் பல தொகுதிகள் ஏற்கெனவே சம்பந்தப்பட்ட நாடுகளில் பலவற்றை சென்றடைந்துவிட்டன.

  இது தவிரவும், வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் தனது பெறுமதியான அனுபவங்களை சீனா உலகின் ஏனைய நாடுகளுடன் பகிர்ந்துகொண்டிருக்கின்றது.ஏனைய நாடுகளின் மருத்துவ நிபுணர்களுடனும் சர்வதேச நிறுவனங்களுடனும் வீடியோ மகாநாடுகளை சீன நிபுணர்கள் நடத்துகின்றார்ள். ஈரான், ஈராக், இத்தாலி மற்றும் சேர்பியா ஆகிய நாடுகளுக்கு சீன மருத்துவர்கள் குழுக்கள் அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றன.

   சீனாவில் உள்ளூராட்சி அரசாங்கங்களும் சீன தொழில்துறை நிறுவனங்களும் சிவில் அமைப்புகளும் வைரஸினால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு நன்கொடைகளை வழங்குகின்றன. சீனா செய்துவருகின்ற இந்த பங்களிப்புகள் " இரும்பையும் கல்லையும் விட பலம்வாய்ந்த எமது கூட்டுச்செயற்பாடும் தோழமையும் பூகோளரீதியான தொலைவுகளைக் கடந்தவையாகும் " என்ற ஒரு சுலோகமாக சீனமக்களினால் போற்றப்படுகின்றன.

    உலகின் ஒரு பெரிய வல்லரசு என்ற வகையில் அமெரிக்கா வைரஸ் பரவலுக்கு எதிரான போராட்டத்தில் ஏனைய நாடுகளுக்கு உதவுவதில் முன்னரங்கத்தில் நின்றிருக்கவேண்டும்.கொரோனாவைரஸினால் பாதிக்கப்பட்ட சீனாவுக்கும் ஏனைய நாடுகளுக்கும் உதவியாக 10 கோடி டொலர்களை வழங்கப்போவதாக அமெரிக்க அதிகாரிகள் பல சந்தர்ப்பங்களில் கூறியிருக்கிறார்கள்.ஆனால், அமெரிக்க அரசாங்கத்தின் பெயரில் அன்பளிப்புச் செய்யப்பட்டிருக்கக்கூடிய எந்தவொரு நிதியையோ அல்லது விநியோகத்தையோ சீனா இதுவரை பெற்றுக்கொள்ளவில்லை. அமெரிக்க நிருவாகத்தின் இந்த உதட்டளவிலான சேவை அதன் உண்மைத்தன்மையையும் நம்பகத்தன்மையையும் பொறுப்புணர்வையும் மலினப்படுத்த மாத்திரமே உதவும்.

    அமெரிக்க அரசாங்கம் முதலில் அதன் உள்நாட்டு சொந்த நிலைவரங்களை சீர்செய்துகொண்டு,  மேலும் தவறுகளைச் செய்வதற்கு முன்னதாக ஏற்கெனவே இழைத்த தவறுகளை விளங்கிக்கொண்டு, சீனா மீது சேறுபூசுவதை நிறுத்தி வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்த ஆக்கபூர்வமான பாத்திரத்தை வகிக்கவேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04