(ஆர்.ராம்)

பொதுமக்களை நெருக்கடிக்குள்ளாக்காதவாறு அனைத்துவிதமான நிதிக் கொடுக்கல் வாங்கல்களையும் இணைய வழிமூலம் மேற்கொள்வதற்குரிய நடவடிக்கைகளை அனைத்து வங்கள் நிதி நிறுவனங்கள் மற்றும் தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் அனைவரும் முன்னெடுக்க வேண்டும் என்று நிதி அமைச்சு மற்றும் தொலைத்தொடர்புகள் ஒழுங்கமைக்கும் ஆணைக்குழு ஆகியன அவசர கோரிக்கை விடுத்துள்ளன.

நிதி அமைச்சின் கீழான அனைத்து திணைக்களங்கள் நிறுவனங்கள் மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு ஆகியன அத்தியாவசிய சேவையின் உள்ளடக்கப்பட்டள்ள நிலையிலேயே மேற்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பொதுமக்களுக்கான நிதிக் கொடுக்கல் வாங்கல்களை இணைய வங்கி கணக்குகள் மற்றும் கைத்தொலைபேசி செயலிகள் மூலம் முன்னெடுப்பதற்குரிய வழிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஊரடங்கு தளர்த்தப்படுகின்ற நிலைமைகளின் போது ஏ.ரி.எம் இயந்திரங்களில் கொடுக்கல் வாங்கல்களைச் செய்வதற்குரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்குமாறும் பணிக்கப்பட்டுள்ளது.