ரியல் மாட்ரிக் கால்பந்தாட்ட கழகத்தின் முன்னாள் தலைவர் லோரென்சோ சான்ஸ், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.

ரியல் மாட்ரிக் என்பது ஸ்பெய்ன் நாட்டின் பிரபல்யமான கால்பந்தாட்ட கழகம் ஆகும்.

சான்ஸ் 1995 - 2000 ஆம் வரையான காலப் பகுதியில் ரயில் மாட்ரிக் கழகத்தின் தலைவராக செயற்பட்டார். அதன்போது ரியல் மாட்ரிக் அணி இரண்டு முறை சம்பியன் லீக் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.

76 வயதான சான்ஸ் கடந்த செவ்வாய்க்கிழமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.