எல்லை நிர்­ணய பணிகள் மாத்­திரம் உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தல்கள் காலம் தாழ்த்­தப்­ப­டு­வ­தற்­கான காரணம் இல்லை. அதற்­கான கார­ணங்­களை நீதிமன்­றத்­திற்கு அறி­வித்­துள்­ளதால் அது தொடர்பில் தற்­போ­தைக்கு கருத்து வெளி­யிட நான் தயா­ராக இல்லை. எல்லை நிர்­ணய பணிகள் தொடர்­பி­லான அறிக்கை கிடைத்­­தாலும் கிடைக்­கா­விட்­டாலும் ஆணைக்­கு­ழு­விற்கு தேர்­தலை நடத்­து­வ­தற்கான அதி­காரம் உள்­ளது என்று தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய தெரி­வித்தார்.

எவ்­வா­றா­யினும் தற்­போது எல்லை நிர்­ணய பணிகள் முற்­று­பெற்­றமை

தொடர்­பி­லான அறிக்கை எமக்கு கிடைக்கும் பட்­சத்தில் அதி­லி­ருந்து இரு மாத­ஙங்­களில் தேர்­தலை நடத்த முடி­யும என்றும் ஆகஸ்ட் 31 ஆம் திகதி எல்லை நிர்­ணயம் தொடர்­பி­லான அறிக்­கைகள் எமக்கு கிடைக்கும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

கொழும்பு ராஜ­கி­ரி­யவில் அமைந்­துள்ள தேர்­தல்கள் செய­ல­கத்தில் நேற்று திங்­கட்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­யா­லளர் சந்­திப்­பின்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்து குறிப்­பி­டு­கை­யில்

எமது நாட்டின் அர­சி­ய­ல­மைப்பு வலு­வாக்கம்இநிறை­வேற்று அதி­கா­ரத்தை நடை­மு­றைப்­ப­டுத்தல் அடிப்­படை கட்­ட­மைப்­புக்­களை தீர்­மா­னிப்­ப­வர்­களை உரு­வாக்க தேர்தல் அவ­சியம். அதேபோல் நாட்டை நிர்­வ­கிப்­ப­தற்கும் அர­சாங்கம் ஒன்று அவ­சியம். உனவே எமது மக்­க­ளுக்கு அர­சாங்கம் ஒன்று தேவை­யாயின் சக­லரும் தமது வாக்­கு­ரி­மையை பாது­காக்க வேண்டும்.

அதனால் அனை­வரும் கண்­டிப்­பாக வாக்­கு­சீட்டில் பெயரை பதிவு செய்ய வேண்டும். கடந்த நாட்­களில் இயற்கை அனர்த்­தங்­க­ளுக்கு முகம்­கொ­டுத்த பகு­திகள் தவிர்ந்த ஏனைய பகு­தி­களில் வாக்கு சீட்­டுக்கள் பயன்­ப­டுத்தும் நட­வ­டிக்­கைகள் முற்­று­பெற்­றுள்­ளன. எனவே சக­லரும் தமது பெயர் விப­ரங்கள் அடங்­கிய விண்­ணப்­பங்­களை ஜுலை 15 ஆம் திக­திக்கு முன்­ன­தாக கிராம சேவ­க­ரி­டத்தில் வழங்­க வேண்டும்.அவ்­வாறு வழங்க முடி­யா­விட்­டாலும் வாக்கு சீட்­டுக்கள் கிடைக்­கா­விட்­டாலும் அது தொடர்பில் கிராம சேவ­க­ருக்கு அறி­விப்­பது அவ­சி­ய­மாகும்.

சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பை வலுப்­ப­டுத்தும் தேச­மாக இலங்­கையை மாற்­றி­ய­மைக்க எதிர்­பார்க்­கின்றோம். முக்­கி­ய­மா­னது சரி­யான நேரத்தில் தேர்­தலை நடத்­து­வ­தாகும்.

அதனால் இந்த முறை வீதியில் இருப்­பவர் உட்பட சக­ல­ரையும் வாக்­குச்­சீட்டில் உள்­வாங்­கி­யுள்ளோம். அத்­துடன் கொழும்பை பொறுத்­த­வ­ரையில் 60 ஆயிரம் பேர் வரையில் வாட­கை வீடு­களில் வசிப்­ப­வர்கள் இவர்­க­ளுக்கு வாக்­கு­ரி­மையை பெற்­றுக்­கொள்ள முடியும். இவர்­களின் சொந்த வசிப்­பிடம் கருத்­தி­ற­்கொள்­ளப்­பட மாட்­டாது.

எதிர்­வரும் தேர்தல்

எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் பல் தளம்பல் நிலைகள் உள்­ளன. தேர்தல் கால­தா­மதம் ஆவது தொடர்பில் வழக்கும் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. ஆனால் இதற்கு பொறுப்­பு­கூற வேண்­டி­ய­வர்­க­ளான உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு வழக்­கி­லி­ருந்து வில­கிக்­கொண்­டுள்­ளது.

அதே­நேரம் எமக்கு கடந்த 2012 ஆம் ஆண்டு கிடைக்­கப்­பெற்ற தேர்தல் முறை­மையில் பல திருத்­தங்கள் செய்ய வேண்­டி­யுள்­ளது. அதில் 17 கார­ணிகள் எந்த விதத்­திலும் ஏற்­றுக்­கொள்ள முடி­யா­தவை. அதனால் அவற்றில் திருத்தம் மேற்­கொள்­வது குறித்து கடிதம் மூலம் அறி­வித்­துள்ளேன். அத்­துடன் எல்லை நிர்­ணய பணிகள் தற்­போது எந்த கட்­டத்தில் உள்­ளன என்­பது தொடர்பில் அமைச்­சிடம் எழுத்­தூ­மூலம் வின­வி­யி­ருந்த போதும் அதற்­கான பதில் இன்னும் கிடைக்­க­வில்லை.

எவ்­வா­றா­யினும் தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவும் செய­ல­கமும் தேர்தல் நடத்­து­வ­தற்­காக ஸ்தாபிக்­கப்­பட்­டதே தவிர தேர்­தலை காலம் தாழத்­து­வ­தற்கு அல்ல. எனவே எல்லை நிர்­ணய பணிகள் நிறைவு பெற்­றாலும் இல்­லா­விட்­டாலும் எம்மால் தேர்­தலை நடத்த முடியும். ஆனால் நீதி மன்ற வழக்கு உள்­ளிட்ட விவ­கா­ரங்­க­ளினால் தேர்தலை காலம் தாழ்த்த வேண்­டி­யுள்­ளது.

அதே­நேரம் தேர்தல் நடத்­தா­மைக்­கான முக்­கிய கார­ணங்­களை நீதி­மன்­றத்­திற்கு அறி­வித்­துள்­ள­மை­யினால் தற்­போது அது தொடர்­பில கருத்து வெளி­யிட முடி­யாத நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. அதே­நேரம் அர­சியல் கட்­சி­களும் சில திருத்­தங்­களை முன்­வைத்­துள்­ளன. அது தொடர்­பிலும் ஆரா­யந்­து­பார்க்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ள­மையும் தேர்தல் தாமத்­திற்­கான கார­ணி­யென கருத முடியும்.இதில் பல்­லங்­கத்­துவ முறைமை தமது தொகுதி தவிர்ந்த ஏனய தொகு­தியில் போட்­டி­யி­டு­ப­வர்கள் உள்­ளிட்ட விட­யங்கள் குறித்து அர­சியல் கட்­சிகள் தமது கருத்­துக்­களை முன்­வைத்­துள்­ளன.

அதே­நேரம் தேர்தல் தொடர்­பி­லான ஊடக அறி­விப்­புக்­களை முதலில் பாரா­ளு­மன்­றத்­திற்கு அறி­விக்க வேண்­டு­மென 19 ஆவது திருத்தத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தற்­கமை­வாக அதனை தற்­போது பாரா­ளு­மன்­றத்­திற்கு அறி­வித்­துள்ளோம். எவ்வாறாயினும் தற்போது எல்லை நிர்ணய பணிகள் முற்றுபெற்றமை தொடர்பிலான அறிக்கை எமக்கு கிடைக்கும் பட்சத்தில் அதிலிருந்து இரு மாதஙங்களில் தேர்தலை நடத்த முடியும் ஆகஸ்ட் 31 ஆம் திகதி எல்லை நிர்ணயம் தொடர்பிலான அறிக்கைகள் தமக்கு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கின்­றோம்.