நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று இடம்பெற்ற நான்கு வெவ்வேறு மோட்டார் சைக்கிள் விபத்துகளில் இளம் ஜோடி உட்பட அறுவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த விபத்துக்கள் தங்காலை, கொக்கரல்ல, கம்பஹா மற்றும் புதுக்குடியிருப்பு பகுதிகளில் இடம்பெற்றுள்ளன.

தங்கலை - திஸ்ஸமஹாராம வீதியில் மோட்டார் சைக்கிள் பஸ்ஸொன்றுடன் மோதியதில் 26 வயதுடைய இளம் ஜோடியினர் பலியாகியுள்ளனர்.

இதேவேளை, தம்புள்ளை - குருநாகல் வீதி கொக்கரல்லயில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 23 மற்றும் 26 வயதுடைய இருவர் உயிரிழந்துள்ளனர்.

கம்பஹாவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவு - பரந்தன் வீதியின் புதுக்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 53 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார். 

இவ்வாறு உயிரிழந்தவர் மன்னார் பகுதியைச் சேர்ந்தவராவார்.

இவ் விபத்துக்கள் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.