(எம்.மனோசித்ரா)

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தால் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மின்சாரக் கட்டணங்களை உரிய நேரத்தில் செலுத்துவதில் மக்கள் அசௌகரியங்கு முகங்கொடுக்க நேரிடும் என்பதால் இம்மாதம் 31 ஆம் திகதி வரை அதற்கான கால அவகாசத்தை வழங்க தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இது தொடர்பில் அவரிடம் வினவிய போது,

தற்போது நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. எனினும் மக்களின் அத்தியாவசிய தேவைகள் குறித்து நாம் தொடர்ச்சியாக கவனம் செலுத்தி வருகின்றோம். அதற்கமையவே இந்த தீர்மானம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எனவே ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் பொது மக்கள் மின்சார கட்டணங்களை செலுத்த முடியும். இது தொடர்பில் வீண் கலவரமடையத் தேவையில்லை.

இதே போன்று எதிர்வரும் நாட்களில் மக்களின் தேவைகளை அறிந்து அரசாங்கம் மேலும் பல நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்று குறிப்பிட்டார்.