45 நிமிடத்தில் நோயை கண்டறியக்கூடிய கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் உடனடி அனுமதியை  வழங்கியுள்ளது.

கலிபோர்னியாவை சேர்ந்த செப்ஹெயிட்  நிறுவனம் மேற்கொண்ட பரிசோதனைக்கு அமெரிக்கா உடனடி அனுமதியை வழங்கியுள்ளது.

மூன்று மணித்தியாலத்தில் கொரோனா வைரசினை கண்டுபிடிக்க கூடிய நடைமுறையை உருவாக்கிய ரொச்சே நிறுவனத்திற்கு சில நாட்களிற்கு முன்னர் அனுமதியை வழங்கியுள்ள நிலையிலேயே சில மணிநேரங்களிற்கு முன்னர் புதிய நிறுவனத்தின் முயற்சிக்கு அமெரிக்கா அனுமதியை வழங்கியுள்ளது.

அமெரிக்காவின் ஆரம்ப கட்ட வைரஸ் பரிசோதனை நடவடிக்கைகளில் ஏறபட்ட தோல்விகள் காரணமாகவும்,புதிய பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு அவசியமான இரசாயனங்கள் பற்றாக்குறை காரணமாகவும் வைரசினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை இனம் காணும் நடவடிக்கைகளின்  வேகம் ஏனைய உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் அமெரிக்காவில் குறைவாகவே காணப்படுகின்றது.

இதன் காரணமாகவே வேகமாக நோயாளிகளை இனம் காணக்கூடிய பரிசோதனைகளிற்கு அமெரிக்கா அனுமதியளித்துள்ளது.

செப்ஹெயிட்  பரிசோதனைகள்  அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளன,முதலில் இந்த பரிசோதனை மருத்துவமனைகளிலேயே இடம்பெறும் ஆனால்  உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளதுதன் காரணமாக ஐசியூக்களிலும் இந்த பரிசோதனையை மேற்கொள்ள முடியும்.

நோயளிகள் குறித்த துல்லியமான பரிசோதனைகள் ,கொரோனா வைரஸ்காரணமாக  சுகாதார தரப்பினர் எதிர்கொள்ளும் அழுத்தங்களை குறைப்பதற்கு உதவும் என செப்ஹெய்டின் தலைமை தலைமை மருத்து மற்றும் தொழில்நுட்ப அதிகாரி டேவிட் பேர்சிங் தெரிவித்துள்ளார்.