நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றின் காரணமாக நாடெங்கும் அமைதியான சூழ்நிலை நிலவிவருகிறது. இந்நிலையில், தற்போது 77 பேர் வரை கொரோனா தொற்றுக்குள்ளாகியிருப்பது உறுதியாகியுள்ளது. 

இந்நிலையில், இத்தொற்று ஏற்பட முன்னர் மக்களை மிக அவதானத்துடன் செயற்படுமாறு அரசாங்கம் அறிவித்தல்களை வழங்கிவருகின்றது. 

அத்தோடு ஆயுர்வேத மருத்துவர்கள் சில மருந்து வகைளை பயன்படுத்தவதன் மூலம் இத்தொற்றிலிருந்து மக்களை பாதுகாத்துக்கொள்ள முடியுமென பரிந்துரைக்கின்றனர்.

அதாவது, இக்கொரோனா தொற்று பரவுவதற்கு இடம்கொடுக்காது, எமது உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொண்டால், இந்நோய் தொற்றிலிருந்து விடுபடுவதற்கு அதிக வாய்ப்புக்கள் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அதற்காக அன்றாட உணவில் காய்கறிகள், கீரை வகைகள், பழங்கள் எனபவற்றை சேர்த்துக்கொள்ளுமாறு மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். 

மேலும், சாயம் சேர்க்கப்பட்ட உணவுகள், மாமிச உணவுகளை தவிர்ப்பது நல்லதெனவும் குறிப்பிட்டுள்ளனர்.

அத்தோடு, முக்கியமாக கொத்தமல்லி, கசாயங்கள், இஞ்சி தண்ணீர் என்பவற்றை பருகுவதோடு, தேனீரிலும் கலந்து பருக முடியும். மேலும், இலைகஞ்சிகளையும் அதிகமாக பருகும்படி அறிவித்துள்ளனர். மேலும், அது போன்ற இயற்கை பானங்களையும், உணவுப் பொருட்களையும் பாவிப்பதனால், பெரிதும் இத்தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியுமென தெரிவித்துள்ளனர்.

மேலும் இவை அனைத்தும் நடைமுறையில் சாத்தியப்பட்டதாலேயே கூறுவதாகவும் மேற்படி ஆயுர்வேத வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

அது போன்ற நடைமுறைகளை நாம் பின்பற்றவோமானால். இலகுவாக நாம் இத்தொற்றை முற்றிலும் நாட்டிலிருந்து ஒழிக்கலாமென தெரிவித்துள்ளனர். இம்மருந்துகளை பயன்படுத்தி பலன் பெற்றதையிட்டு மகிழ்ச்சியடைவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்