(எம்.எப்.எம்.பஸீர்)
கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 77 ஆக உயர்ந்துள்ளது.
இதில் கடந்த ஜனவரி மாதம் அடையாளம் காணப்பட்ட சீனப் பெண் குணமடைந்து நாட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில், ஏனைய 76 பேரும் அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலை மற்றும் வெலிகந்த ஆதார வைத்தியசாலை ஆகியவற்றில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இன்றைய தினம் மட்டும் அடையாளம் காணப்பட்ட வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 5 ஆகும். கொரோனா வைரஸ் தொற்று குறித்து இலங்கையில் அடையாளம் காணப்பட்டோரில் 48 பேர், தனிமைப்படுத்தல் மற்றும் தொற்று நீக்கல் மத்திய நிலையங்களுக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை இங்கு விஷேட அம்சமாகும்.
கொரோனா தொற்றுக்குள்ளானோரில் 72 வீதமானவர்கள் ஆண்கள் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இந்நிலையில் கொரோனா சந்தேகத்தில் 18 வைத்தியசாலைகளில் 4 வெளிநாட்டவர்கள் உட்பட 245 பேர் மருத்துவ கண்காணிப்பின் கீழ் சிகிச்சைபெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு கூறியது.
இதனிடையே கொரோனா தொற்றுள்ளோருடன் தொடர்புகளைப் பேணிய 11,482 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கை மையத்தின் தலைவர் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டார்.
கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்புகளைப் பேணிய மேலும் பலர் இருக்கக் கூடும் எனவும் அவர் கூறினார். எனவே, சமூகப் பொறுப்புணர்ந்து சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக தங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும் எனவும் சுயமாக தனிமையாகி கண்காணிக்க வேண்டும் எனவும் இராணுவத் தளபதி சுட்டிக்காட்டினார்.
அத்துடன் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்திற்கொண்டு வெளிநாடுகளில் இருந்து வருகை தந்துள்ளவர்கள் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கும் பட்சத்தில், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் எனவும் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டார்.
கொரோனா தொற்றை இல்லாதொழிப்பதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு இன்றியமையாதது என சுட்டிக்காட்டிய அவர், வெளிநாட்டிற்கு சென்றமைக்கான காரணம் அல்லது, அங்கிருந்து நாட்டிற்கு திரும்பியமைக்கான காரணம் தொடர்பில் தற்போது ஆராயப்படமாட்டாது எனவும், இதன் காரணமாக எவ்வித அச்சமும் இன்றி பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்யுமாறும் தெரிவித்தார்.
நாட்டின் நிலைமையை கருத்திற்கொண்டு தேவை ஏற்படும் பட்சத்தில் 34 அரச நிறுவனங்களின் ஊழியர்களை கொரோனா தொற்று ஒழிப்பிற்கு பயன்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
ஆகவே, அனைத்து அரச ஊழியர்களும் இதற்கு எந்நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என கொரோனா தொற்றை தடுப்பதற்கான தேசிய நடவடிக்கை மையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இந்தியாவிற்கு யாத்திரை மேற்கொண்ட 200 க்கும் அதிகமான இலங்கை பிரஜைகள் இன்று நாடு திரும்பினர். நாடு திரும்பிய அனைத்து யாத்திரிகர்களும் தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள்:
1.மத்தேகொட
2. கொழும்பு 08
3.கொழும்பு 08
4. மஹர
5. உடுபத்தாவ
6. துன் கன்னாவ
7. கொழும்பு 08
8. கல்கிசை
9. கொழும்பு 08
10. காலி
11.அகுரேகொட
12.ராஜகிரிய
13. பெளத்தாலோக மாவத்த
14. கொழும்பு 06
15. கந்த காடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையம்
16.கந்த காடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையம்
17.கந்த காடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையம்
18.கந்த காடு தனிமைப் படுத்தல் மத்திய நிலையம்
19.மட்டக்களப்பு தனிமைப்படுத்தல் மத்திய நிலையம்
20.கந்த காடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையம்
21.கந்த காடு தனிமைப் படுத்தல் மத்திய நிலையம்
22.கந்த காடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையம்
23.கந்த காடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையம்
24.கந்த காடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையம்
25.கல்கந்த தனிமைப்படுத்தல் மத்திய நிலையம்
26.கந்த காடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையம்
27.கந்த காடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையம்
28.கந்த காடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையம்
29.மாரவில
30.இரத்தினபுரி
31.மட்டக்களப்பு தனிமைப்படுத்தல் மத்திய நிலையம்
32.கந்த காடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையம்
33.வவுனியா தனிமைப்படுத்தல் மத்திய நிலையம்
34.உடுகம்பொல
35.களனிய
36.வத்தளை
37. நெலும்தெனிய
38. களுத்துறை தெற்கு
39. கொழும்பு 08
40.கந்த காடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையம்
41.மட்டக்களப்பு
42.வைக்கால்
43.வைக்கால்
44. மொரவக்க
45.கந்த காடு தனிமைப் படுத்தல் மத்திய நிலையம்
46.பண்டாரகம
47.பேருவளை
48.மாலபே
49.தெஹிவளை - கல்கிசை
50.ரத்மலான
51.வத்தளை
52. ஜா எல
53.ரத்மலானை
54. இரத்தினபுரி
55.இரத்தினபுரி
56.வைக்கால்
57.ஜா எல
58.ஜா எல
59.பண்டாரவளை
60.கந்த காடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையம்
61.கந்த காடு தனிமைப் படுத்தல் மத்திய நிலையம்
62.வைக்கால்
63.ஜா எல
64. ஜா எல
65.கொழும்பு 08
66.கந்த காடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையம்
67.கந்த காடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையம்
68.கந்த காடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையம்
69. நிவாசிபுர
70.பாணந்துறை
71. கொழும்பு 08
72. அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்தவர்
73.அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்தவர்
74.அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்தவர்
75.அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்தவர்
76. இடம் குறித்து உடனடியாக அறிவிக்கப்படவில்லை.