(எம்.மனோசித்ரா)

இவ்வருடம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு 22 தேர்தல் மாவட்டங்களிலும் 304 அரசியல் கட்சிகளும் கட்சிகள் சார்பில் 3652 வேட்பாளர்களும், அதே போன்று 313 சுயாதீன குழுக்களும் அவற்றின் சார்பில் 3800 வேட்பாளர்களும் மொத்தமாக 7452 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர். கடந்த வியாழக்கிழமை பொதுத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்திருந்தது.

அவற்றினடிப்படையில் தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள தரவுகளிலேயே இவ்விடயம் பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ் அமைப்பின் தரவுகளின் படி 22 மாவட்டங்களிலும் வேட்புமனு செலுத்திய அரசியல் கட்சிகள், சுயாதீன குழுக்கள் , அவற்றில் நிராகரிக்கப்பட்டவை மற்றும் போட்டியிடுவம் வேட்பாளர்கள் பற்றிய விபரங்கள் வருமாறு :

கொழும்பு

கொழும்பு மாவட்டத்தில் 19 அரசியல் கட்சிகள் வேட்மனு தாக்கல் செய்திருந்த போதிலும் அவற்றில் 3 கட்சிகளின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதே போன்று 27 சுயாதீன குழுக்களின் வேட்புமனுக்களில் ஒரு வேட்புமனு மாத்திரம் நிராகரிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் அரசியல் கட்சிகளின் சார்பில் 352 வேட்பாளர்களும் , சுயாதீன குழுக்களில் 572 வேட்பாளர்களும் மொத்தமாக 924 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

கம்பஹா

கம்பஹாவில் 17 கட்சிகளின் வேட்புமனுக்களில் 2 நிராகரிக்கப்பட்டுள்ளதோடு, 22 சுயாதீன குழுக்களின் வேட்புமனுக்களில் 3 நிராகரிக்கப்பட்டுள்ளது. இம் மாவட்டத்தில் அரசியல் கட்சி சார்பில் 315 வேட்பாளர்களும், சுயாதீன குழுக்கள் சார்பில் 378 வேட்பாளர்களும் மொத்தமாக 693 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

களுத்துறை

களுத்துறையில் 18 கட்சிகளின் வேட்புமனுக்களில் 7 நிராகரிக்கப்பட்டுள்ளதோடு, 14 சுயாதீன குழுக்களின் வேட்புமனுக்களில் 1 நிராகரிக்கப்பட்டுள்ளது. இம் மாவட்டத்தில் அரசியல் கட்சி சார்பில் 143 வேட்பாளர்களும், சுயாதீன குழுக்கள் சார்பில் 169 வேட்பாளர்களும் மொத்தமாக 312 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

கண்டி

கண்டி மாவட்டத்தில் 18 கட்சிகளின் வேட்புமனுக்களில் 1 நிராகரிக்கப்பட்டுள்ளதோடு, 15 சுயாதீன குழுக்களின் வேட்புமனுக்களில் 3 நிராகரிக்கப்பட்டுள்ளது. இம் மாவட்டத்தில் அரசியல் கட்சி சார்பில் 255 வேட்பாளர்களும், சுயாதீன குழுக்கள் சார்பில் 180 வேட்பாளர்களும் மொத்தமாக 435 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

மாத்தளை

மாத்தளை மாவட்டத்தில் 13 கட்சிகள் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதோடு அவை அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அதே போன்று 10 சுயாதீன குழுக்களின் வேட்புமனுக்களில் அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இம் மாவட்டத்தில் அரசியல் கட்சி சார்பில் 104 வேட்பாளர்களும், சுயாதீன குழுக்கள் சார்பில் 80 வேட்பாளர்களும் மொத்தமாக 184 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

நுவரெலியா

நுவரெலியா மாவட்டத்தில் 13 கட்சிகளின் வேட்புமனுக்களில் 1 நிராகரிக்கப்பட்டுள்ளதோடு,  சுயாதீன குழுக்களின் 15 வேட்புமனுக்களில் 2 நிராகரிக்கப்பட்டுள்ளது. இம் மாவட்டத்தில் அரசியல் கட்சி சார்பில் 132 வேட்பாளர்களும், சுயாதீன குழுக்கள் சார்பில் 143 வேட்பாளர்களும் மொத்தமாக 275 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

காலி

காலி மாவட்டத்தில் 14 கட்சிகளின் வேட்புமனுக்களில் 1 நிராகரிக்கப்பட்டுள்ளதோடு, 13 சுயாதீன குழுக்களின் வேட்புமனுக்களில் அனைத்தும்  ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இம் மாவட்டத்தில் அரசியல் கட்சி சார்பில் 156 வேட்பாளர்களும், சுயாதீன குழுக்கள் சார்பில் 156 வேட்பாளர்களும் மொத்தமாக 312 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

மாத்தறை

மாத்தளை மாவட்டத்தில் 16 கட்சிகளின் வேட்புமனுக்களில் 3 நிராகரிக்கப்பட்டுள்ளதோடு, 8 சுயாதீன குழுக்களின் வேட்புமனுக்களில் 1 நிராகரிக்கப்பட்டுள்ளது. இம் மாவட்டத்தில் அரசியல் கட்சி சார்பில் 130 வேட்பாளர்களும், சுயாதீன குழுக்கள் சார்பில் 70 வேட்பாளர்களும் மொத்தமாக 200 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

அம்பாந்தோட்டை

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 11 கட்சிகளின் வேட்புமனுக்களில் அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. 8 சுயாதீன குழுக்களின் வேட்புமனுக்களிலும் அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இம் மாவட்டத்தில் அரசியல் கட்சி சார்பில் 110 வேட்பாளர்களும், சுயாதீன குழுக்கள் சார்பில் 80 வேட்பாளர்களும் மொத்தமாக 190 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

யாழ்ப்பாணம்

யாழ் மாவட்டத்தில் 19 கட்சிகளின் வேட்புமனுக்களில் அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. 17 சுயாதீன குழுக்களின் வேட்புமனுக்களில் 3 நிராகரிக்கப்பட்டுள்ளது. இம் மாவட்டத்தில் அரசியல் கட்சி சார்பில் 190 வேட்பாளர்களும், சுயாதீன குழுக்கள் சார்பில் 140 வேட்பாளர்களும் மொத்தமாக 330 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

வன்னி

வன்னி மாவட்டத்தில் 19 கட்சிகளின் வேட்புமனுக்களில் 2 நிராகரிக்கப்பட்டுள்ளதோடு, 34 சுயாதீன குழுக்களின் வேட்புமனுக்களில் 6 நிராகரிக்கப்பட்டுள்ளது. இம் மாவட்டத்தில் அரசியல் கட்சி சார்பில் 153 வேட்பாளர்களும், சுயாதீன குழுக்கள் சார்பில் 252 வேட்பாளர்களும் மொத்தமாக 405 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் 19 கட்சிகளின் வேட்புமனுக்களில் 3 நிராகரிக்கப்பட்டுள்ளதோடு, 25 சுயாதீன குழுக்களின் வேட்புமனுக்களில் 3 நிராகரிக்கப்பட்டுள்ளது. இம் மாவட்டத்தில் அரசியல் கட்சி சார்பில் 128 வேட்பாளர்களும், சுயாதீன குழுக்கள் சார்பில் 176 வேட்பாளர்களும் மொத்தமாக 304 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

திகாமடுல்ல

திகாமடுல்லயில் 20 கட்சிகளின் வேட்புமனுக்களில் அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. 38 சுயாதீன குழுக்களின் வேட்புமனுக்களில் 4 நிராகரிக்கப்பட்டுள்ளது. இம் மாவட்டத்தில் அரசியல் கட்சி சார்பில் 200 வேட்பாளர்களும், சுயாதீன குழுக்கள் சார்பில் 340 வேட்பாளர்களும் மொத்தமாக 540 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

திருகோணமலை

திருகோணமலை மாவட்டத்தில் 16 கட்சிகளின் வேட்புமனுக்களில் 3 நிராகரிக்கப்பட்டுள்ளதோடு, 24 சுயாதீன குழுக்களின் வேட்புமனுக்களில் 10 நிராகரிக்கப்பட்டுள்ளது. இம் மாவட்டத்தில் அரசியல் கட்சி சார்பில் 91 வேட்பாளர்களும், சுயாதீன குழுக்கள் சார்பில் 98 வேட்பாளர்களும் மொத்தமாக 189 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

குருணாகல்

குருணாகல் மாவட்டத்தில் 13 கட்சிகளின் வேட்புமனுக்களில் 1 நிராகரிக்கப்பட்டுள்ளதோடு, 20 சுயாதீன குழுக்களின் வேட்புமனுக்களில் 1 நிராகரிக்கப்பட்டுள்ளது. இம் மாவட்டத்தில் அரசியல் கட்சி சார்பில் 143 வேட்பாளர்களும், சுயாதீன குழுக்கள் சார்பில் 209 வேட்பாளர்களும் மொத்தமாக 352 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

புத்தளம்

புத்தளத்தில் 14 கட்சிகளின் வேட்புமனுக்களில் 1 நிராகரிக்கப்பட்டுள்ளதோடு, 20 சுயாதீன குழுக்களின் வேட்புமனுக்களில் 1 நிராகரிக்கப்பட்டுள்ளது. இம் மாவட்டத்தில் அரசியல் கட்சி சார்பில் 144 வேட்பாளர்களும், சுயாதீன குழுக்கள் சார்பில் 120 வேட்பாளர்களும் மொத்தமாக 264 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

அநுராதபுரம்

அநுராதபுரத்தில் 14 கட்சிகளின் வேட்புமனுக்களில் 2 நிராகரிக்கப்பட்டுள்ளதோடு, 12 சுயாதீன குழுக்களின் வேட்புமனுக்களில் 2 நிராகரிக்கப்பட்டுள்ளது. இம் மாவட்டத்தில் அரசியல் கட்சி சார்பில் 144 வேட்பாளர்களும், சுயாதீன குழுக்கள் சார்பில் 120 வேட்பாளர்களும் மொத்தமாக 264 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

பொலன்னறுவை

பொலன்னறுவை மாவட்டத்தில் 12 கட்சிகளின் வேட்புமனுக்களில் 1 நிராகரிக்கப்பட்டுள்ளதோடு, 9 சுயாதீன குழுக்களின் வேட்புமனுக்களில் 1 நிராகரிக்கப்பட்டுள்ளது. இம் மாவட்டத்தில் அரசியல் கட்சி சார்பில் 88 வேட்பாளர்களும், சுயாதீன குழுக்கள் சார்பில் 64 வேட்பாளர்களும் மொத்தமாக 152 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

பதுளை

பதுளை மாவட்டத்தில் 13 கட்சிகளின் வேட்புமனுக்களில் 1 நிராகரிக்கப்பட்டுள்ளதோடு, 13 சுயாதீன குழுக்களின் வேட்புமனுக்களில் 1 நிராகரிக்கப்பட்டுள்ளது. இம் மாவட்டத்தில் அரசியல் கட்சி சார்பில் 144 வேட்பாளர்களும், சுயாதீன குழுக்கள் சார்பில் 144 வேட்பாளர்களும் மொத்தமாக 288 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

மொனராகலை

மொனராகலை மாவட்டத்தில் 12 கட்சிகளின் வேட்புமனுக்களில் 2 நிராகரிக்கப்பட்டுள்ளதோடு, 9 சுயாதீன குழுக்களின் வேட்புமனுக்களில் அனைத்தும்  ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இம் மாவட்டத்தில் அரசியல் கட்சி சார்பில் 90 வேட்பாளர்களும், சுயாதீன குழுக்கள் சார்பில் 81 வேட்பாளர்களும் மொத்தமாக 171 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இரத்தினபுரி

இரத்தினபுரி மாவட்டத்தில் 16 கட்சிகளின் வேட்புமனுக்களில் அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளனர். 6 சுயாதீன குழுக்களின் வேட்புமனுக்களில் அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளள. இம் மாவட்டத்தில் அரசியல் கட்சி சார்பில் 224 வேட்பாளர்களும், சுயாதீன குழுக்கள் சார்பில் 84 வேட்பாளர்களும் மொத்தமாக 308 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

கேகாலை

கேகாலை மாவட்டத்தில் 13 கட்சிகளின் வேட்புமனுக்களில் 1 நிராகரிக்கப்பட்டுள்ளதோடு, 8 சுயாதீன குழுக்களின் வேட்புமனுக்களில் 1 நிராகரிக்கப்பட்டுள்ளது. இம் மாவட்டத்தில் அரசியல் கட்சி சார்பில் 144 வேட்பாளர்களும், சுயாதீன குழுக்கள் சார்பில் 84 வேட்பாளர்களும் மொத்தமாக 228 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.