இந்தியாவிலிருந்து வந்த யாத்திரீகர்கள் கிளிநொச்சி, முல்லைத்தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் - இராணுவ பேச்சாளர்

21 Mar, 2020 | 03:56 PM
image

(செ.தேன்மொழி)

தம்பதிவ யாத்திரைக்காக இந்தியாவுக்குச் சென்று நேற்று வெள்ளிக்கிழமை நாடுதிரும்பியுள்ள 210 பக்தகர்களையும் தொற்று நீக்கம் செய்வதற்காக இன்று காலை முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தொற்றுநீக்க  பிரிவுகளுக்கு அழைத்துச் சென்றுள்ளதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்தார்.

தம்பதிவ யாத்திரையை மேற்கொண்டு நாடு திரும்பியுள்ள பக்தர்கள் தொடர்பில் ஊடகப்பேச்சாளரிடம் நாம் வினவியபோது அவர் கூறியதாவது,

உலகளாவிய ரீதியில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் துரித நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

அதற்கமைய வைரஸ் தொற்றைநீக்குவதற்காக 22 மத்தியநிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போது 3063 பேர் தொற்று நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர்.

தம்பதிவ யாத்திரைக்காக இந்தியாவுக்குச் சென்றிருந்த இலங்கையர்கள் 210 பேர் நேற்று வெளிளிக்கிழமை இரவு நாடு திரும்பியிருந்தனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்து இவர்கள் அனைவரையும் இராணுவத்தினர் பாதுகாப்பான முறையில் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுள்ள தொற்று நீக்கம் மத்தியநிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

குறித்த மத்தியநிலையங்களுக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ள யாத்திரிகள் அனைவரும் இருவாரங்களுக்கு தடுத்துவைக்கப்பட்டு தொற்று நீக்கம் செய்யப்படவுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி...

2025-03-26 09:35:37
news-image

கம்பஹா மாவட்டத்தில் சில பகுதிகளுக்கு நாளை...

2025-03-26 09:21:47
news-image

இன்றைய வானிலை

2025-03-26 08:57:47
news-image

வவுனியாவில் கிணற்றில் இருந்து இளம் யுவதியின்...

2025-03-26 04:11:39
news-image

பாலின சமத்துவத்தை உறுதி செய்வதற்கும் பாலின...

2025-03-26 04:07:54
news-image

யாழில் அனைத்து சபையிலும் வென்று இருப்போம்...

2025-03-26 04:00:55
news-image

யாழ்ப்பாணத்தில் அதீத போதை காரணமாக இளைஞன்...

2025-03-26 03:52:49
news-image

அருணாசலம் லெட்சுமணன் உள்ளிட்ட குழுவினர் வடக்கு...

2025-03-26 03:47:50
news-image

நபர்களுக்கு எதிரான தடை நாட்டுக்கெதிரான தடையாக...

2025-03-25 21:19:45
news-image

மக்னஸ்கி சட்டத்தின் கீழான தடையை வரவேற்கின்றோம்...

2025-03-25 17:49:05
news-image

தேசபந்து தென்னக்கோன் அரசியலமைப்பை மீறி பொலிஸ்மா...

2025-03-25 21:34:18
news-image

தேசபந்து தென்னக்கோனை பதவி நீக்க முழுமையான...

2025-03-25 21:34:44