(ஆர்.ராம்)

கொரோனா தொற்றை மறைப்பவர்கள் மற்றும் தொற்கு இலக்காக மறைந்து வாழ்பவர்கள் கண்டறியப்படும் பட்சத்தில் கடுமையான சட்ட நடவடிக்கைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்று பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.


கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் அதற்கான அறிகுறிகளை மறைத்து சிகிச்சைகளை பெற முயல்கின்றார்கள். அதேபோன்று சமுகத்திலிருந்து மறைந்து வாழவும் விளைகின்றார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறானவர்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கப்பெறும் பட்சத்தில் அவர்கள் கைது செய்யப்பட்ட கடுமையான சட்டநடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கொரோனா தொற்று குறித்த அறிகுறிகளை கொண்டிருப்பவர்கள் தயக்கமின்றி அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கோ அல்லது வைத்தியசாலைகளிற்கோ அல்லது சுகாதார உத்தியோகத்தர்களிடத்திலோ தகவல்களை வழங்கி உரிய மருத்துவ கண்காணிப்புக்கு உள்ளாக வேண்டும் என்றும் அவர் கூறினார்.

அதேநேரம், வெளிநாடுகளில் இருந்து வருகை தந்தவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களில் தமது விபரங்களை பதிவு செய்யும் செயற்பாட்டை இனினும் தாமதிக்காது மேற்கொள்ள வேண்டும் என்றும்ரூபவ் அவ்வாறானவர்கள் பற்றி தகவல்களை அறிந்தவர்கள் சமுகப்பொறுப்புடன் பொலிஸாரிருக்கு தகவல் வழங்க வேண்டும் என்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.