நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை மீறிய 8 பேர் பண்டாரவளை மற்றும் ஹப்புத்தளைப் பகுதிகளில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் பண்டாரவளை பகுதியில் கைதுசெய்யப்பட்டவர்கள் நிகழ்வில் (Party) கலந்து கொண்டதாலும் மற்றும் ஹப்புத்தளை பகுதியில் கைசெய்யப்பட்டவர்கள் ஊரடங்கு நேரத்தில் கடைகளை திறந்து வைத்திருந்த காரணத்தாலும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்று நாடளாவிய ரீதியில் பரவும் ஆபத்தையடுத்து அரசாங்கம் நாடளாவிய ரீதியில் 20 ஆம் திகதி மாலை 6 மணி முதல் 23 ஆம் திகதி காலை 6 மணி வரை பொலிஸ் ஊரடங்கை அமுல்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.