(ஆர்.யசி)

இந்தியாவின் தம்பதெனிய மத வழிபாடுகளுக்கு சென்றிருந்த இலங்கை பெளத்த யாத்ரீகர்கள் மீண்டும் நாட்டுக்கு திரும்பியுள்ள நிலையில் ஒருதொகுதி யாத்ரீகர்களும் கொரோனா தொற்று குறித்த அவதானத்தை கருத்தில் கொண்டு அனுராதபுரம் தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மேலும் இந்தியாவில் தங்கியுள்ள பெளத்த யாத்திரீகளை விரைவில் இலங்கைக்கு அனுப்பிவைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக இந்தியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் ஆலையம் அறிவித்துள்ளது. 

871 பேர் இன்னமும் இந்தியாவில் தங்கியிருக்கும் நிலையில் அவர்களை இலங்கைக்கு வரவழைக்கும் விசேட விமான சேவைகளை ஏற்பாடு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.