புத்தளம், நீர்கொழும்பு மற்றும் கொச்சிக்கடை பகுதிகளில் ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்பட்ட 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவுவதை இல்லாதொழிக்க அரசாங்கம் பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் நிலையில், நாட்டின் மக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ள நிலையி்லும், குறித்த சட்டத்தை மீறுவோரை கைது செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
மேற்படி 20 பேரும் கடற்படையினராலேயே கைது செய்யப்பட்டுள்ளனர்.