நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் அச்சுறுத்தல் காரணமாக, ஒழுங்குசெய்யப்பட்டிருந்த இரத்ததான முகாம்கள் இரத்துச் செய்யப்பட்டமையால் தேசிய இரத்த வங்கியில் குருதி இருப்பில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

Image result for blood donation

இலங்கை தேசிய இரத்ததான சேவையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி லக்ஷ்மன் எதிரிசிங்க, கொரோனா வைரஸ் பரவலையடுத்து இரத்ததான முகாம்கள் இரத்துச்செய்யப்பட்டமையால் இப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளமையை உறுதிசெய்துள்ளார்.

இப்பற்றாக்குறை காரணமாக அன்றாடம் ஏனைய நோயாளர்களுக்குத் தேவையேற்படும் பட்சத்தில் வழங்குவதில் நெருக்கடி ஏற்படலாம். நாடளாவிய ரீதியிலுள்ள 15 அரச வைத்தியசாலைகளில் இரத்தம் சேகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

அதேவேளை இரத்தத்தைப் பெறமுன்னர் முறையான பரிசோதனைகளுக்கு உட்படுத்துவதற்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

அதேவேளை இரத்ததானம் செய்வதற்கு விரும்பும் பொதுமக்கள் 011 5332153 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலம் தொடர்புகொண்டு, இரத்ததானம் செய்வதற்கான முன்பதிவை மேற்கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.