(நா.தனுஜா)

கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில், தகவல்களை வழங்கும் தொலைத்தொடர்பாடல் சேவைகள் மிகவும் முக்கியத்துவம் பெறுவதனால் அதனை அத்தியாவசிய சேவையாக இலங்கைத் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அறிவித்திருக்கிறது.

நாட்டினுள் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாளை முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரையான 8 நாட்கள் சுகாதாரம், போக்குவரத்து உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து அரச மற்றும் தனியார் துறையினருக்கு 'வீட்டிலிருந்து பணிபுரியும் வாரம்' என்று அரசாங்கத்தினால் இன்று பிரகடனப்பட்டது.

இந் நிலையிலேயே தொலைத்தொடர்பாடல் சேவைகளை அத்தியாவசிய சேவையாக இலங்கைத் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு பிரகடனப்படுத்தியுள்ளது.