அண்மை காலமாக ஊடகங்கள் வடபகுதி மக்களிடம் கொரோனா தொற்று வந்தால் யாழ் போதனா வைத்தியசாலை தயாரா என மக்கள் பிதியில் காணப்பட்டமையால் இதுபற்றி ஆராய்வதற்கு இன்று (19) யாழ் போதனா வைத்தியசாலைக்கு யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத்தலைவரும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

இவ்விஜயத்தின் போது யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி, பிரதி பணிப்பாளர் சி. யமுனாநந்தாவை சந்தித்து யாழ் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் நிலமைகள் பற்றி ஆராய்ந்தார். 

தொடர்ந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அமைந்துள்ள கொரோனா வைரஸ் தொற்று நோய் விடுதியையும் நோய் தொற்று ஏற்பட்டால் தேவையான வசதிகள் உள்ளனவா என்பதையும் பார்வையிட்டார்.

தொடர்ந்து கருத்துரைத்த யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி,

யாழ் போதனா வைத்தியசாலையில் இதுவரையும் கொரோனா நோய் சந்தேகத்தின் பேரில் 8 பேர் அனுமதிக்கப்பட்டு அதில் ஐவர் வெளியேறிவிட்டனர். மீதியுள்ள மூவரில் அவர்களது பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னர் அவர்களுக்கும் நோய் தொற்று இல்லையாயின் அவர்களும் வெளியேறுவார்கள்.

அனுமதிக்கப்பட்டு இருப்பவர்களும் கடுமையான நோயை கொண்டிருக்கவில்லை இப்போதைய நிலமையில் அவர்களுக்கு தேவையான போதிய வசதிகளை கொண்டிருக்கிறோம்

கொரானா நோய் விடுதியில் 20 படுக்கைகளை கொண்டதாக அமைந்துள்ளது. கொரோனா நோய் என உறுதிசெய்யப்பட்டால் தனியான அறை வசதிகளும் செய்யப்பட்டு பாராமரிக்கப்படும் வடமாகாணத்தை பொறுத்தவரையில் இதுவரை நோய்தொற்று அறியப்படாமையால் மக்கள் பீதியடையதேவையில்லை.

வடபகுதி மக்கள் சுகாதார அமைச்சு, உலக சுகாதார நிறுவனம் போன்றவை கூறும் தற்காப்பு நடவடிக்கைகள் (ஒன்று கூடல்,ஒருவர் மற்றவருக்கு அருகில் செல்வதை தவிர்த்தல், பிறரை தொடுவதை தவிர்த்தல், அடிக்கடி கைகழுவுதல், பொது நிகழ்ச்சிகளைதவிர்தல்) போன்றவை மூலம் ஒருசிலரிடம் வைரஸ் கிருமி காணப்பட்டாலும் தொற்றுவதை தவிர்கமுடியும்.

பொதுமக்கள் பயப்பிடதேவையில்லை. சுகாதார அமைச்சு எங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தருகின்றனர்.

நாங்கள் தாயர் நிலையிலேயே உள்ளோம். நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் அவர்களை பரிசோதிக்கவும் பாராமரிக்கவும் தயார் நிலையிலேயே உள்ளோம்.

வைத்தியசாலை கூட்டம் இரண்டு நாட்களுக்கு ஒருதடவை கூட்டி கலந்துரையாடி வருகிறோம். அவசர தொலைபேசி இலக்கத்தையும் கொடுத்துள்ளோம். எதுவிதமான ஐயங்கள் இருந்தாலும் எங்களை தொடர்பு கொள்ளலாம்.

வடபகுதியை பொறுத்த வகையில் மிகுந்த கரிசனையோடும் அவதானத்தோடும் இருக்கின்றோம் என்பதை கூறிக்கொள்கிறேன். என்றார்.

தொடர்ந்து கருத்துரைத்த அங்கஜன் இராமநாதன்,

அண்மை காலமாக ஊடகங்கள் வடபகுதி மக்களிடம் கொரோனா தொற்று வந்தால் யாழ் போதனா வைத்தியசாலை தயாரா என மக்களின் சந்தேகத்திற்கும் பயத்திற்கும் பதில் சொல்வது வேண்டும் என்ற நோக்கத்தோடு யாழ் போதனா வைத்தியசாலைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டேன். 

இந்த விஜயத்தின் போது கொரானா நோய் தொற்றை சமாளிக் வைத்தியசாலை எப்போதும் தயாராகவே உள்ளது. எவரும் பயப்பிடதேவையில்லை என்ற எனக்கு வலுவுட்டும் செய்தியை வைத்தியசாலை பணிப்பாளர் கூறினார்.

மக்களே அரசாங்கமும் சுகாதார அமைச்சும் கூறும் நடமுறைகளை பின்பற்றுங்கள், நோய்தொற்று ஏற்பட்டாலும் அதனை சமாளிக்க முடியும்.

மக்கள் பீதியடையாமல் அரசாங்கம் தற்போது கூறியுள்ள “வீட்டிலிருந்து ஏழு நாள் வேலை செய்யுங்கள்” என்ற செயற்பாட்டை செய்யுங்கள் இவ்வாறு செய்தால் வடமாகணத்தில் இந்த நோய் தொற்றை தவிர்கலாம். என்றார்.