நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்!

Published By: Vishnu

19 Mar, 2020 | 06:24 PM
image

2020.03.18 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்

01.மத்தள ராஜபக்ஷ விமான நிலையத்திற்குள் ( MRIA ) விமான இராணுவ முகாம் ஒன்றை அமைப்பதற்காக 200 ஏக்கர் காணி பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.

இலங்கையில் அனைத்து விமான நிலையங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்பு இலங்கை விமானபடைக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக இந்துமா சமுத்திர வலையத்தில் மூலோபாய முக்கியத்துவத்தைக்கொண்ட விமான நிலையம் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ள மத்தள ராஜபக்ஷ விமான நிலையத்திற்கு பாதுகாப்பு வழங்குவதற்காக கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்துக்கு சமனான விமான முகாம் ஒன்றை அமைப்பது அத்தியாவசியமாகியுள்ளது. இதற்கு அமைவாக மகாவலி, விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் அவர்களும் உணவு பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் சேமநல அமைச்சர் அவர்களும் சமர்ப்பித்த பரிந்துரையை கவனத்தில் கொண்டு, மத்தள ராஜபக்ஷ விமான நிலையத்திற்கு அருகாமையில் 200 ஏக்கர் காணியை இதற்காக ஒதுக்கீடு செய்வதற்கு அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

02. உத்தரவாத வரையறை பேரவை என்ற கவுன்சில் நிறுவனத்தைக் கலைத்தல்.

கொழும்பு போட்சிற்றி திட்டத்தின் நிதி நகரத்தை ஸ்தாபித்தல் மற்றும் அதன் பணிகளை முன்னெடுக்கும் நோக்கில், 2016 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவையின் தீர்மானத்துக்கு அமைய உத்தரவாத வரையறை பேரவையான கவன்சில் நிறுவனம் அமைக்கப்பட்டது. இந்த நிறுவனம் தற்பொழுது மேற்கொள்ளும் பணிகள் குறித்த விடயங்களை மதிப்பீடு செய்வதற்காக சம்பந்தப்பட்ட துறையில் விசேட நிபுணத்துவத்தை வெளிப்படுத்தும் நிபுணர்கள் சிலரைக் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன் இந்த நிறுவனத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பதன் தேவை இல்லை என்பது இந்த குழுவினால் அவதானிக்கப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக, 2007 இலக்கம் 07 இன் கீழான நிறுவன சட்டத்தின் 319 (ஆ) சரத்தின் விதிகளைக் கடைப்பிடித்து இந்த நிறுவனத்தை கலைப்பதற்காக பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் இதற்கு தேவையான ஏனைய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக திறைசேரி செயலாளருக்கு அதிகாரத்தை வழங்குவதற்கும் நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

03. மாலபே, தகவல் தொழில்நுட்ப பூங்காவில் உள்ள காணியின் ஒரு பகுதியை மஹமெவ்னாவ பௌத்த வித்தியாலயத்துக்கு ஒதுக்கீடு செய்தல்.

மஹமெவ்னாவ பௌத்த வித்தியாலயத்தை அமைப்பதற்காக மாலபே பிரதேசத்தில் உள்ள சுமார் நான்கு ஏக்கர் காணியை நிவாரண கொடுப்பனவை வழங்கும் அடிப்படையில் வழங்குமாறு சேருவில, வில்ஹம்வெஹெர, சோமாவதி ரஜமஹா விகாராதிபதி தேரரினால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைக்கு அமைவாக மாலபே தகவல் தொழில்நுட்ப பூங்காவிற்குள் உள்ள 2 ஏக்கர் 2 ருட் 0.70 பேச் காணியின் ஒரு பகுதியை அதற்காக வழங்குவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபையினால் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக, சம்பந்தப்பட்ட பணிக்காக இந்த காணியின் ஒரு பகுதி மஹமெவ்னாவ பௌத்த வித்தியாலயத்திற்கு 30 வருடத்திற்கு குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கு நகர அபிவிருத்தி, நீர் விநியோகம் மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

04.தேசிய தொழில் தகுதியைப்பெற்ற பயனாளிகளுக்காக ஷஷநிபுணதா பலபத்திரயக்' என்ற திறனாற்றல் அனுமதிப் பத்திரத்தை வழங்குதல்.

முனையம் (Terminal) மற்றும் தொழில் கல்வி ஆணைக்குழு சபையினால் தேசிய தொழில் தகுதி கட்டமைப்பு (NVQ) அறிமுகப்படுத்தப்பட்டு மானியம் வழங்கும் நடைமுறை ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது. இந்த நடைமுறைக்காக தற்பொழுது உள்ள ஏற்றுக்கொள்ளும் முறையை மேலும் விரிவுபடுத்துவதற்காக சர்வதேச தொழிலாளர் அமைப்பு மற்றும் இலங்கை சேவை சம்மேளனத்துடன் கூட்டாக தேசிய தொழில் தகுதியுடனான திறனாற்றலைக்கொண்ட கலைஞர்கள் இடம்பெயர்ந்து வெளிநாட்டு பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்காக ஷஷநிபுணதா பலபத்திரயக் என்ற திறனாற்றல் அனுமதிப்பத்திரத்தை அறிமுகப்படுத்துவதற்காக உத்தேச திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் முதல் கட்டத்தை நிர்மாணித்தல், பராமரிப்பு சேவை மற்றும் மனை / புகலிடமளித்தல் போன்ற துறைகளில் துரிதமாக வளர்ச்சியடைந்துவரும் தொழிற்சாலை தெரிவுசெய்யப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக, ஆகக் கூடிய ரீதியில் ஒரு வருட அனுபவத்துடன் தேசிய தொழில் தகுதி சான்றிதழைக் கொண்டுள்ள பயனாளிகள், திறனாற்றல் கொண்ட பணியாளர்களுக்காக (SMART) அட்டை ஒன்றின் மூலம் இலகுவாக முனைய மற்றும் தெழில் கல்வி ஆணைக்குழுவின் மூலம் நிபுணதா பலபத்திரயக் என்ற திறனாற்றல் அனுமதிப் பத்திரத்தை வழங்குவதற்காக திறனாற்றல் அபிவிருத்தி, தொழில் மற்றும் தொழிலாளர் தொடர்புகள் அமைச்சர் அவர்களினால் வழங்கப்பட்ட ஆவணத்துக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

05.இலங்கை வயம்ப பல்கலைக்கழகத்தின் வைத்திய பீடத்தை அமைப்பதற்காக உத்தேச காணியை கொள்வனவு செய்தல் மற்றும் கட்டட தொகுதியை நிர்மாணித்தல்.

இலங்கை வடமேல் பல்கலைக்கழகத்தில் வைத்தியப்பீடத்தை நிர்மாணிப்பதற்காக காணி ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக 70 மில்லியன் ரூபா அமைச்சரவையினால் அங்கீகாரத்துடன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் தற்போதைய பெறுமதிக்கு அமைவாக இந்த காணியை பெற்றுக்கொள்வதற்காக சுமார் 92 மில்லியன் ரூபா தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக, இந்த காணியை பெற்றுக்கொள்வதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியை 92 மில்லியன் ரூபா வரையில் அதிகரிப்பதற்காக உயர் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் அவர்கள் வழங்கிய பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

06.யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் மற்றும் பிரிட்டன் பர்மிங்காம் (Birmingham) பல்கலைக்கழகத்துக்கு இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையை எட்டுதல்.

நாட்டை மேம்படுத்தும் சௌபாக்கிய தொலைநோக்கு என்ற கொள்கை கட்டமைப்புக்கு அமைவாக மனிதவள அபிவிருத்தி மூலம் அறிவு அடிப்படையிலான பொருளாதாரத்தை நோக்கி பயணிக்கும் அபிவிருத்தி மூலோபாய வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தும் தேவை அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த மூலோபாயத்துக்கு உட்பட்ட வகையில் பிரிட்டனின் சுகாதார ஆய்வுக்கான தேசிய நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் ஹற்றியல் பைபிறில்லேசன் (Atrial Fibrillation) முகாமைத்துவம் தொடர்பாக உலக சுகாதார குழுவின் ஆய்வு தொடர்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் மற்றும் பிரிட்டனின் பர்மிங்காம் (Birmingham) பல்கலைக்கழகத்துக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையை மேற்கொள்வதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. உத்தேச புரிந்துணர்வு உடன்படிக்கை மூலம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பரீட்சார்த்திகளினதும், பட்ட பின்படிப்பு பரீட்சார்த்திகளினதும் ஆய்வு ஆற்றலை மேம்படுத்துவதற்கான பின்புலத்தை வழங்கும். இதற்காக பிரிட்டனின் பர்மிங்காம் (Birmingham) பல்கலைக்கழகத்தினால் முழுமையான நிதி உதவி மற்றும் ஆலோசனைகான நிதி உதவி என்ற ரீதியில் 209,000 பிரிட்டன் ஸ்ரேலிங்பவுண்களை ஆய்வுக்கு நன்கொடையாக ஒதுக்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக உத்தேச ஆய்வு திட்டத்திற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையை எட்டுவதற்காக உயர்கல்வி மற்றும் தொழில்நுட்ப புத்தாக்க அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

07. கல்வி வெளியீட்டு திணைக்களத்தினால் 2021 ஆம் ஆண்டுக்காக இலவசமாக விநியோகிக்கப்படும் பாடசாலை புத்தகங்களை அச்சிடுவதில் 45 சதவீதத்தை அரச அச்சக கூட்டுத்தாபனத்துக்கு வழங்குதல்.

2018 ஆம் ஆண்டிலும் 2019 ஆம் ஆண்டிலும் பாடசாலை புத்தகங்களில் ஒரு பகுதியை அச்சிடுவதற்காக கேள்வி மனு விதிமுறைகளுக்கு அப்பால் நேரடியாக அரச அச்சக திணைக்களத்துக்கு வழங்கப்பட்டிருந்தது. இதற்கு அமைவாக இந்த கூட்டுத்தாபனத்தின் ஆற்றல் மற்றும் மேலதிக செயல் பணிகளை கவனத்தில் கொண்டு 2021 ஆம் ஆண்டுக்கு தேவையான மொத்த பாடசாலை புத்தகங்களில் ஒரு பகுதியை அச்சிடும் ஒப்பந்தம் பகிரங்க கேள்வி மனுக்களுக்கு அப்பால் அரசாங்க அச்சக திணைக்களத்துக்கு வழங்குவதற்காக கல்வி அமைச்சரினால் வழங்கப்பட்ட ஆவணத்துக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

08.தியகம சர்வதேச விளையாட்டு கட்டட தொகுதி மற்றும் விளையாட்டு அகாடமியை விளையாட்டு பல்கலைக்கழகமாக அபிவிருத்தி செய்தல்.

கொழும்பு மாவட்டத்தில் ஹோமாகம பிரதேச செயலாளர் பிரிவில் தியகமவில் அமைந்துள்ள சுமார் 125 ஏக்கர் காணி நிலப்பரப்பில் விளையாட்டு கல்லூரி சர்வதேச விளையாட்டு தொகுதிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் கொண்டதாக நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. ஷஷ சௌபாக்கிய தொலைநோக்கு கொள்கை பிரகடனத்தில் முன்வைக்கப்பட்டுள்ள ஆலோசனைக்கு அமைவாக தேசிய விளையாட்டு பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்கக்கூடிய வகையில் இந்த விளையாட்டு கட்டட தொகுதிக்கான திட்டத்தில் திருத்தத்தை மேற்கொண்டு அபிவிருத்தி செய்வதற்கு தேவையான நிர்மாண நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக விளையாட்டு மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று உத்தேச விளையாட்டு பல்கலைக்கழகத்தை அமைக்கும் நடவடிக்கைக்கு அமைவாக அனைத்து விடயங்களையும் மதிப்பீடு செய்து சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்காக ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் ஆரம்ப உபவேந்தராக பணியாற்றிய கலாநிதி சந்திரா எம்புல்தெனிய அவர்களின் தலைமையில் புத்திஜீவிகள் குழு ஒன்றை அமைப்பதற்காக அந்த அமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

09.வரையறுக்கப்பட்ட தேசிய கடதாசி நிறுவனம் கொண்டுள்ள வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையில் தயாரிப்பு நடவடிக்கைகளை பல்வகைப்படுத்தும் திட்டம் என்ற ரீதியில் மீண்டும் ஆரம்பித்தல்.

செயலிழந்துள்ள அரச வர்த்தகத்தை மீண்டும் ஆரம்பிக்கும் முக்கிய பணி அரசாங்கத்தினால் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக வழைச்சேனை கடதாசி தொழிற்சாலை செலிழந்துள்ள திட்டம் என்ற ரீதியில் மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகள் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கு அமைவாக தொழிற்சாலை வளவில் சூரிய சக்தி மூலமான மின்சார உற்பத்தியை மேற்கொள்ளுதல், தொழிற்சாலைகளின் பணிகளுக்காக நீர் விநியோகத்தை பெற்றுக்கொண்ட பின்னர் மேலதிக நீரை சுத்தம் செய்து அதன் ஓரு பகுதியை பயன்படுத்தி குடிநீரை போத்தல்களில் அடைக்கும் தொழிற்சாலை ஒன்றை அமைத்தல், வாழைச்சேனை தொழிற்சாலை அமைந்துள்ள நிலப்பரப்பில் வெற்றிடமாக உள்ள 100 ஏக்கர் காணியில் பொருத்தமான இடத்தை தெரிவுசெய்து அந்த நிலப்பரப்பில் அந்த பிரதேசத்துக்கு பொருத்தமான பயிர் உற்பத்தியை மேற்கொள்ளுதல் மற்றும் சேவைத்தளம் மற்றும் ஓய்வூதிய விடுதி ஒன்றை ஆரம்பித்தல் ஆகிய துணைத்திட்டத்துடன் உத்தேச பல்வகைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக தொழிற்சாலை மற்றும் விநியோக முகாமைத்துவ அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் கொள்கை ரீதியில் உடன்பாட்டுக்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

10.இலங்கை ரயில்வே திணைக்களத்துக்காக நாடு தழுவிய மின் சமிக்ஞை கட்டமைப்பை மறுசீரமைத்தல்.

கொழும்பை அண்டியுள்ள பிரதேசங்களில் ரயில் கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியினால் கடனுதவி வழங்கப்பட்டுள்ளதுடன், இந்த நிதியில் ஒரு பகுதியை இலங்கை ரயில்வே திணைக்களத்துக்காக நாடு தழுவிய மின் சமிக்ஞை கட்மைப்பை கொள்வனவு செய்வதற்காக பயன்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக இதற்கான ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கு அமைய JV of Ms/ Dialog Axiata PLC and Ms/ Dialog Broadband Network (Pvt.) Ltd என்ற நிறுவனத்துக்கு வழங்குவதற்காக போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. தேசிய ரீதியில் உற்பத்தி செய்யப்படும் கேபிள் மற்றும் மின்தாங்கி வகைகளை இலங்கை மின்சார சபை மற்றும் அதனுடன் ஒன்றிணைந்த நிறுவனத்துக்காக கொள்வனவு செய்யும் போது தேசிய தயாரிப்புக்களுக்கு முக்கியத்துவம் வழங்குதல்.

சமீப காலத்தில் இலங்கை மின்சார சபை மற்றும் அதனுடன் ஒன்றிணைந்த நிறுவனத்துக்கு பொருட்களை கொள்வனவு செய்யும் போது வழங்கப்பட்டுள்ள சுங்கவரி நிவாரணத்தின் காரணமாக தேசிய தயாரிப்புடன் ஒப்பிடுகையில் வெளிநாட்டு தயாரிப்புக்களின் விலை குறைவு காரணமாக இலங்கை மின்சார சபை மற்றும் அதனுடன் ஒன்றிணைந்த நிறுவனம் வெளிநாட்டு தயாரிப்புக்களை ஆகக் கூடுதலான வகையில் கொள்வனவு செய்வதில் ஆழமாக செயற்பட்டு வருவதுடன், இது தேசிய கேபிள் தயாரிப்பு தொழிற்சாலைக்கு பாதகமான வகையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலைமையின் கீழ் தேசிய தயாரிப்புக்களுக்கு நியாயமான போட்டித்தன்மையை உறுதி செய்வதற்காக இலங்கை மின்சார சபை மற்றும் அதனுடன் ஒன்றிணைந்த நிறுவனங்களினால் இலங்கையில் தயாரிக்கப்படும் மின்சார கேபிள். மின் கடத்தி, கல்;வனைஸ் செய்யப்பட்ட இரும்பு போன்ற பொருட்கள் மற்றும் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக மேற்கொள்ளப்படும் பெறுகைச் செயற்பாட்டில், கேள்வி மனுவை மதிப்பீடு செய்யும் பொழுது தற்பொழுது உள்ள தேசிய தயாரிப்புக்களுக்காக வழங்கப்படும் 20 சதவீத அளவுக்கு மேலதிகமாக, மேலதிக நிவாரணமாக இவ்வாறான பொருட்கள் மற்றும் உபகரணங்களை இறக்குமதி செய்யும் சந்தர்ப்பத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து வரி அளவுக்கு அமைவாக இறக்குமதியாளர்கள் செலுத்தவேண்டியதாக கருதப்படும் தொழில்நுட்ப மதிப்பீட்டை மேற்கொள்வதற்கு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் அவர்களினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

12.மின் விநியோகத்தை மேற்கொள்வதில் நம்பிக்கைத் தன்மையை உறுதிசெய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கும் திட்டம் - பொதி 7 லோட் A2 :பியகம மின்வலைப்பின்னல் துணை நிலையத்தின் Var கட்டமைப்பு ஒன்றை (100 MVar) ஸ்தாபித்தல்.

இலங்கை மின்சார சபைக்கு உட்பட்ட ஒலிபரப்பு மற்றும் விநியோக வலைப்பின்னலை வலுவூட்டுவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியினால் மின்சக்தி விநியோக நம்பகத்தன்மையை மேம்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் 115 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளதுடன், இந்த திட்டத்தின் கீழ் பியகம மின் வலைப்பின்னல் உப கோபுரத்தில் VAR கட்டமைப்பு ஒன்றை (100 MVar) ஸ்தாபிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கு அமைய M/s Hyosung Heavy industries Corporation என்ற நிறுவனத்திடம் வழங்குவதற்காக மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

13.பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2020 – பிரதமர் மற்றும் ஏனைய அமைச்சர்களினால் தமது கட்சி வேட்பாளர் நிலையை ஊக்குவிப்பதற்காக உத்தியோகபூர்வ வாகன மற்றும் உத்தியோகபூர்வ வீடுகளைப் பயன்படுத்துதல் மற்றும் அது தொடர்பில் அரசாங்கத்துக்கு பணத்தை செலுத்துவதன் தேவை.

அதிமேதகு ஜனாதிபதி அவர்களினால் தற்பொழுது 8 ஆவது பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதுடன். இது தொடர்பாக பாராளுமன்ற பொது தேர்தலை நடத்துவதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பாராளுமன்ற பொது தேர்தல் நடைபெறும் வகையில் பிரதமர் மற்றும் அமைச்சரவை அமைச்சர்கள் உரித்தான உத்தியோகபூர்வ நடவடிக்கைகளை நிறைவேற்றுவதுடன் சபாநாயகர் மற்றும் எதிர்கட்சி தலைவர் அரசியல் யாப்பு பேரவையின் அங்கத்தவர்களாக அதன் உத்தியோகபூர்வ பணிகளில் பங்குகொள்ள வேண்டும். இதேபோன்று மேலே குறிப்பிடப்பட்டவர்களில் இக் காலப்பகுதிக்குள் தமது கட்சி மற்றும் வேட்பாளர்களை ஊக்குவிக்கும் பணிகளில் தொடர்புபடுவதினால் உரித்தான உத்தியோகபூர்வ வாகனம் மற்றும் வீடுகளைப் பயன்படுத்துவதற்காக அவர்களினால் அரசாங்கத்துக்கு பணம் செலுத்துவது பொருத்தமானது என அவதானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக 2015 பொது தேர்தல் நடைபெற்ற சந்தர்ப்பத்தில் கடைப்பிடிக்கப்பட்;ட முறைக்கு அமைவாக மேலே குறிப்பிடப்பட்ட பதவிகளை வகிப்போர் கீழ் கண்ட வகையில் செயற்படவேண்டும் என்று அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

  • தமது கட்சி மற்றும் வேட்பாளர் நிலையை ஊக்குவிக்கும் பணிகளுக்காக உத்தியோகபூர்வ வாகனம் பயன்படுத்தப்படுமாயின் ஒரு வாகனத்துக்காக 100,000 ரூபா வீதம் மாதாந்த கொடுப்பனவை செலுத்துதல்.
  • உத்தியோகபூர்வ வாகனத்துக்காக வழங்கப்படும் எரிபொருளுக்கு மேலதிகமாக தேவைப்படும் எரிபொருளின் அளவு அவர்களினாலேயே தனிப்பட்ட முறையில் மேற்கொள்ளுதல்.
  • தமது கட்சி மற்றும் வேட்பாளர் நிலையை ஊக்குவிப்பதற்காக விமானம் அல்லது ஹெலிகொப்ரரை பயன்படுத்துவாராயின் அதற்காக அனைத்து செலவுகளையும் அவரின் தனிப்பட்ட செலவில் மேற்கொள்ளல்.
  • தமது கட்சி மற்றும் வேட்பாளர் நிலையை மேம்படுத்துவதற்காக அவர்களினால் தமது உத்தியோக பூர்வ வீடு பயன்படுத்தப்படுமாயின் மாதாந்த கொடுப்பனவாக 100,000 ரூபாவை செலுத்துதல்.

14. உரத்தை கொள்வனவு செய்தல் - 2020 ஏப்ரல்

மகாவலி, விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சுக்கு உட்பட்டதாக உள்ள இலங்கை உர நிறுவனம் (லக் போஹோர) மற்றும் வரையறுக்கப்பட்ட கொமர்சல் உர நிறுவனத்துக்காக ( கொமர்ஷல் போஹோர) 2020 ஏப்ரல் மாதத்தில் இறக்குமதி செய்யப்படவேண்டிய இரசாயன உரத்தொகையை இறக்குமதி செய்வதற்கான பெறுகைகள், அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கு அமைய கீழ் கண்ட நிறுவனத்திடம் வழங்குவதற்காக மகாவலி, விவசாயம் , நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவையினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

  • வரையறுக்கப்பட்ட இலங்கை உர நிறுவனம் மற்றும் வரையறுக்கப்பட்ட கொமர்ஷல் உர நிறுவனத்துக்காக 27,400 மெற்றிக்தொன் ஜுரியா (கிரனியூலா) 5 சதவீதம் மெற்றிக்தொன் 270.74 அமெரிக்க டொலர்கள் வீதம் வெலன்சி இன்ரநெஸனல் ரேடிங் பிரைவேட் லிமிட்டெட் இடம் வழங்குதல்.
  • வரையறுக்கப்பட்ட கொழும்பு கொமர்ஷல் உர நிறுவனத்துக்காக 2,040 மெற்றிக்தொன் ஜுரியா (பரில்டி) 5 சதவீதம் ஒரு மெற்றிக்தொன் 288.30 அமெரிக்க டொலர்கள் வீதம் சுவிஸ் சிங்கப்பூர் ஓவர்சீஸ் என்ரபிறைஸ் லிமிட்டெட் இடம் கொள்வனவு.
  • வரையறுக்கப்பட்;ட இலங்கை உர நிறுவனத்துக்காக றிபிள் சுப்பர் பொஸ்பேற் என்ற 3,000 மெற்றிக்தொன் 5 சதவீதம் 1 மெற்றிக்தொன் 263.00 அமெரிக்க டொலர்களுக்கு கோல்டன் பாலி இன்ரநெஸனல் ரேடிங் பிரைவேட் லிமிட்டெட் இடம் வழங்குதல்.

15. சர்வதேச பொருளாதாரத்துக்கு Covid -19 உடன் ஏற்பட்டுள்ள சவால்களுக்கு மத்தியில் பொருளாதாரத்தை நிர்வகித்தல்.

புதிய கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலக பொருளாதாரம் வீழ்ச்சி கண்டுள்ளதுடன், போக்குவரத்து, சுற்றுலா மற்றும் விமான பயணத்துறை முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த நோய் ஆரம்பமான சீனாவினால் நோயை கட்டுப்படுத்துவதற்கும் தவிர்ப்பதற்கும் மேற்கொண்ட நடைமுறையின் காணரமாக நோய் பரவுவதை கட்டுப்படுத்திய நடைமுறையை அந்த நாடு எடுத்துக்காட்டியதுடன் தற்பொழுது இந்த புதிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் வளர்ச்சியடைந்த நாடுகள் உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் பரவிவருகின்றது. இந்த நிலைமையின் கீழ் நாட்டில் பொதுமக்கள் சுகாதார சேவையை முன்னெடுத்தல், நோய்க்கான சிகிச்சையை வழங்குவதற்காக முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுதல் பாரிய அளவிலான வரையறுக்கப்பட்ட சேவை மற்றும் விநியோகத்தை மேற்கொள்வதைப் போன்று சுற்றுலா ஏற்றுமதி வெளிநாட்டு வேலைவாய்ப்பு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் அந்த துறைகள் சம்பந்தப்பட்ட சிறிய வர்த்தகங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் தலையிடுவது அவசிமாகியுள்ளது.

2020 மார்ச் மாதம் 2 ஆம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் 2020 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை, அத்தோடு அதுவரையில் கடைப்பிடிக்கப்பட்ட இடைக்கால நிறைவேற்று கணக்கின் மூலம் வழங்கப்பட்டிருந்த மானியம், 2019 ஆம் ஆண்டுக்கு அமைவாக மருந்துகளைக் கொள்வனவு செய்தல், உரத்தை கொள்வனவு செய்தல் மற்றும் பல்வேறு நிர்மாணங்களை மேற்கொள்வதற்கான பற்றுச்சீட்டுக்கான கொடுப்பனவுகள் வழங்குவதைப் போன்று 2020 பொதுத் தேர்தலை நடத்துவதற்கு போதுமானதாக இல்லை என்ற அடிப்படையில் தேவையான மானியத்தை பெற்றுக்கொள்வதற்காக அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைக்கு எதிர்கட்சியின் ஒத்துழைப்பு கிடைக்காமையின் காரணமாக மாற்று முறை தொடர்பில் கவனம் செலுத்தவேண்டி அரசாங்கத்துக்கு ஏற்பட்டது. இதனால் அரசியல் யாப்பில் அதிமேதகு ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைவாக இந்த பணிகளுக்கு தேவையான மானியத்தை பெற்றுக்கொள்வதற்கான முறைகள் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், இதற்கு அமைவாக திறைசேரியினால் பின்வரும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  • நிலுவை மருந்து பற்றுச்சீட்டை செலுத்துவதற்காக 10 பில்லியன் ரூபாவை விடுவித்தல்.
  • கொரோனா ஒழிப்பு செயற்பாடுகளுக்காக 500 மில்லியன் ரூபாவை விடுவித்தல்.
  • உர பெறுகைக்கான பற்றுச்சீட்டு தொகையை செலுத்துவதற்காக 3 பில்லியன் ரூபாவை விடுவித்தல்.
  • சிறிய மற்றும் நடுத்தர அளவிலான பற்றுச்சீட்டுதொகையை தீர்ப்பதற்காக 5 பில்லியன் ரூபாவை விடுவித்தல்.
  • 2 வருட காலம் முழுவதும் செலுத்தப்படாத சிரேஸ்ட பிரஜைகளின் வைப்பீட்டுக்கான வட்டிக்காக 46 பில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்தல்
  • 2020 பொது தேர்தலுக்கு தேவையான 8 பில்லியன் ரூபா மானியத்தை வழங்குதல்.

சர்வதேச பொருளாதாரத்தில் உருவாகியுள்ள மந்த போக்கின் காரணமாக பொருளாதாரத்தில் உள்ள இடர்நிலையை கவனத்தில் கொண்டு மத்தியகால தேசிய தீர்வு தொடர்பில் ஈடுபடவேண்டிய நிலைமை பெரும்பாலான நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கு அமைவாக தற்பொழுது உலக சந்தையில் நிலவும் எரிபொருள் விலை குறைவை கவனத்தில்கொண்டு உரிய பயனைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் அரசாங்கத்தினால் கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன் சம்பந்தப்பட்ட துறைகளின் நிபணர்களின் கருத்துக்களை கவனத்தில் கொண்டு கீழ் கண்ட ஆலோசனைகளை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

  • வீதி நெரிசலைக் கட்டுப்படுத்துதல் மற்றும் பொது மக்களைப் போன்று தனியார் வாகன போக்குவரத்தை இலகுபடுத்துவதை நோக்காக கொண்டு தற்பொழுது சந்தையில் எரிபொருள் விலையை அதேபோன்று முன்னெடுத்தல்.
  • எரிபொருள் இறக்குமதியில் அரசாங்கத்துக்கு இலாபத்தை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் இறக்குமதி வரியை விதித்தல்.
  • சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை குறைவினால் கிடைக்கப்பெறும் தொகையை பயன்படுத்தி எரிபொருள் நிலைப்படுத்திய நிதியத்தை அமைத்தல் மற்றும் 6 மாத காலப்பகுதிக்குள் 200 பில்லியனை இந்த நிதியத்திற்குள் திரட்டுதல்.
  • இலங்கை மின்சார சபையினால் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு செலுத்தவேண்டிய தொகையை குறைக்கக்கூடிய வகையில் இந்த நிதியத்தில் 50 பில்லியன் ரூபாவை இலங்கை மின்சார சபைக்கு வழங்குதல் அதன் மூலம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் மக்கள் வங்கிக்கும் இலங்கை வங்கிக்கும் செலுத்தவேண்டிய கடன் நிலுவையை தீர்த்தல்.
  • எரிபொருள் விலை குறைப்பை கவனத்தில் கொண்டு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் மசகு எண்ணெய் ஒரு லீட்டர் 70 ரூபா வீதம் இலங்கை மின்சார சபைக்கு வழங்குதல் அதன் மூலம் அனல் மின்நிலையத்தினால் உற்பத்தி செய்யப்படும் மின்சார அலகுக்கு செலவாகும் 30 மில்லியன் ரூபாவிலும் பார்க்க குறைத்து வங்கி கடன் மற்றும் வட்டி தொகையை தீர்த்தல்.

இதேபோன்று நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் வரட்சி நிலை நிலவுவதும், தற்போதைய நிலைமையின் கீழ் நியாயமான விலைக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கும் தேவையை கவனத்தில் கொண்டு 1 கிலோ கிராம் பருப்பின் ஆகக்கூடிய சில்லறை விலை 65 ரூபாவாகவும், ரின் மீன் 425 கிராம் ரின் மீனின் ஆகக் கூடிய சில்லறை விலையை 100 ரூபாவாக குறைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

புதிய கொரோனா வைரஸின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலா, தைத்த ஆடை, வர்த்தகம் போன்ற துறைகளை வர்த்தக பேண்தகு முறையில் முன்னெடுப்பதற்ககாக கீழ் கண்;ட நிவாரணங்களை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

  • வங்கி மற்றும் நிதி நிறுவனங்களினால் பெற்றுக்கொண்ட கடனை செலுத்துவதற்காக 6 மாத நிவாரண காலத்தை வழங்குதல்.
  • விசேடமாக தகவல் தொழில்நுட்ப மற்றும் தைத்த ஆடைத்துறைக்காக நெகிழ்வுத்தன்மையைக்கொண்ட கடமைக்கான கால எல்லையை அறிமுகப்படுத்துதல் மற்றும் மேலதிக கொடுப்பனவு மற்றும் விடுமுறை தின கொடுப்பனவுக்கான நிவாரணத்தை வழங்குதல்.
  • 4 சதவீத வட்டியின் அடிப்படையில் பணி மூலதன தேவையை ஏற்படுத்திக்கொடுத்தல்.

அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த மேலே குறிப்பிட்ட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33