தேசிய நல்லிணக்கம் இல்லாமல் தேசிய பிரச்சினைக்ளுக்கோ அல்லது எங்கள் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கோ தீர்வு காணமுடியாது மக்கள் எம்மை அதிக ஆசனங்களில் வெல்லவைக்கவேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக் கட்சியின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
வேட்புமனுக்களை கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் சின்னமான வீணைச் சின்னத்தில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றோம் நாம் அடிக்கடி கூறுவது போன்று எங்களின் இலக்கு மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி அந்த வகையில் தேசியக் கட்சியான பொதுஜனப்பெரமுனவின் கூட்டில் அங்கம் வகிக்கின்ற நாங்கள் வடக்கு கிழக்கில் போட்டிபோடுகின்றோம்.
அதாவது தேசிய நல்லிணக்கம் இல்லாமல் தேசிய பிரச்சினைக்ளுக்கோ அல்லது எங்கள் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கோ தீர்வு காணமுடியாது. அந்த வகையில் இந்த வரவிருக்கும் தேர்தலில் மக்கள் யார் தங்களடன் இருக்கின்றார்கள் யார் தங்களின் பிர்சசினைகளைத் தீர்ப்பார்கள் என்ற தீர்க்மான முடிவு எடுத்து அவர்கள் எங்களுக்கு ஆணை தருவார்களாக இருந்தால் எங்கள் மக்கள் எதிர்கொள்ளும் மூன்று விதமான பிரச்சினைகள் அரசியல் உரிமைக்கான தீர்வு அபிவிருத்திக்கான தீர்வு அன்றாட பிரச்சினைகளுக்கானதீர்வு கடந்த காலங்களில் எங்களின் அரசியல் பலத்திற்கு ஏற்ப வகையில் தீர்த்திருக்கின்றோம்.
எதிர்காலத்தில் அதிகபடியான வாக்குகளையும் அதிகபடியான ஆசனங்களையும் மக்கள் எங்களுக்கு தந்து தங்களுடைய ஆணையை வெளிப்படுத்துவார்களாக இருந்தால் மக்கள்எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஒரு வருடம் அல்லதுஇரண்டு வருங்களில் தீர்ப்போம் நாங்கள் எந்தவருடத்திலும் சொன்னது கிடையாது செல்லப்போவது கிடையாது.
அதாவது ஆட்சியாளர்கள் ஏமாற்றிவிட்டார்கள் என்று பெய்யுரைக்கப்போவதில்லை. மக்கள் ஆணை தருவார்கள் என்றால் எதை நாங்கள் சொல்லுகின்றோமோ அதைச் செய்கின்றவர்களாகத்தான் எங்களுடைய வரலாறு நீண்ட காலமாக பதியப்பட்டுள்ளது.
தற்போதைய சூழலில் மக்கள் எதிர்கொள்கின்ற கொரோனாப்பிரச்சினை தொடர்பில் அமச்சரவையில் நீண்ட நேரம் கலந்துரையாடியுள்ளோம். வடக்கில் இருக்கக்கூடிய ஐந்து மாவட்டங்களிலுமுள்ள அரசாங்க அதிபர் உதவி அரசாங்க அதிபர்கள் பிரதேச செயலாளர்கள் மற்றம் பொலிஸ்தரப்பினர் சுகாதாரப் பிரிவினர் அத்தியாவசிய சேவைகள் தொடர்பாக கலந்துரையாடி அந்தப் பிரச்சினைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நிலையில் உள்ளோம் வெளிநாடுகளின் கவனயீனப் பிழையினால் இந்த வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளது.
இலங்கையில் குறிப்பாக தாயப்பிரதேசத்தில் அதனைத் தடுப்பதற்கு விரைவான நடவடிக்கை எடுப்போம் அனைவரும் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
இதேவேளை கடந்த காலங்களில் மக்களின் நலன்கள் என்று கூறும் கட்சிகள் அகோர யுத்தத்தை நிறுத்துமாறு கூறவில்லை ஆனால்இப்போது தேர்தலை பிற்போடக்கேட்கின்றார்கள் நாங்களும் அதனைக் கருத்தில் எடுத்துக்கொண்டுள்ளோம்.
அமைச்சரவையிலும் இது தொடர்பாக கலந்துரையாடியுள்ளோம் தேர்தல் ஆணையாளர் தான் இது தொடர்பில் முக்கிய முடிவு எடுப்பார் என்பதைநான் நம்புகின்றேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM