கொரோனா வைரஸ் தாக்கத்தின் எதிரொலி ஏற்றுமதி செய்யப்படும் கடலுணவுகளின் விலையில் வீழ்ச்சி !

By T Yuwaraj

19 Mar, 2020 | 05:12 PM
image

கொரோனா வைரஸ் தொற்றின் அபாயகர நிலைமைகள் காரணமாக ஏற்றுமதி செய்யப்படும் கடலுணவுகளின்  விலைகளில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர் .

கடந்த வாரத்தின் ஆரம்பம்முதல் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் இலங்கையில் அதிகரித்திருப்பதன் காரணமாக நாடு அசாதாரண சூழலில் காணபடுகின்ற நிலையில் கடலுணவுகள் பல ஏற்றுமதி குறைவடைந்துள்ளதோடு விலைகளும் குறைவடைந்துள்ளன. 

குறிப்பாக கொழும்புக்கு ஏற்றுமதி செய்யப்படும் அறுக்குளா , அஞ்சலா , பாரை இன மீன்கள் மற்றும் கடல் நீரேரிகளில் பிடிபடும் கல் நண்டுகள் என்பன கடந்தகாலங்களில் ஏற்றுமதி செய்யபட்ட விலைகளைவிட தற்போது சடுதியாக குறைவடைந்துள்ளதாக முல்லைத்தீவு கடற்தொழிலாளர் சமாச தலைவர் அன்டனி தெரிவித்தார் .

கடந்தகாலங்களில் ஒரு கிலோ  1500 வுக்கு ஏற்றுமதி செய்யபட்ட அறுக்குளா மீன் தற்போது 1000 ரூபாவுக்கே கொழும்பு வியாபாரிகளால் கொள்வனவு செய்யபடுவதாகவும் ஒரு கிலோ 4000 ரூபாவுக்கு கடந்தகாலங்களில் ஏற்றுமதி செய்யபட்ட  கிரேட் தர கல்நண்டு தற்போது 1500 முதல் 2000 ரூபாவுக்கு கொள்வனவு செய்யபடுவதக்வும் அவர் தெரிவித்தார் .

சுற்றுலாதுறை , மற்றும் தொழிற்சாலைகளில் உற்பத்திகள் என்பன இந்த கொரோனா தொற்றுகாரணமாக் வீழ்ச்சி அடைந்துள்ள நிலைமையே இந்த விலைகள் குறைவடைவதற்க்கான காரணம் என கொள்வனவுகளில் ஈடுபடும் கொழும்பு வியாபாரிகள் தெரிவிப்பதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர். 

.இதனால் எரிபொருள் உள்ளிட்ட பல செலவுகளுக்கு மத்தியில் கடல்தொழில் ஈடுபடும் மீனவர்களுக்கு கொரோனா தாக்கம் பாரிய வாழ்வாதர் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாகவும் முல்லைத்தீவு மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர் .

இந்த கடல் உணவுகளின் ஏற்றுமதி விலைகள் வீழ்ச்சி அடைந்துள்ளதன் காரணமாக உள்ளூர் சந்தைகளில் போதியளவு கடல் உணவுகள் கிடைப்பதாகவும் மலிவான முறையில் பெற்றுகொள்ள முடிவதாகவும் முல்லைத்தீவு பிரதேச கடலுணவு பிரியர்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர் .

முக்கிய செய்திகள்

icon-left
icon-right