அனைத்து விமான நிலையங்களின் பாதுகாப்பும் விமான படைக்கு பொறுப்பாக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இந்து சமுத்திர வலய  கேந்திர மாக முக்கியத்துவம் மிக்க விமான நிலையமாக மத்தள விமான நிலையம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்தில் விமான படை முகாம் அமைப்பது அவசியமாகவுள்ளது.

விமான நிலையத்திற்குற்பட்ட பகுதியில் 200 ஏக்கர் நிலப்பரப்பில் விமானப்படை முகாம் அமைப்பதற்கு மகாவலி, விவசாயத்துறை, நீர்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் முன்வைத்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.