இலங்கையில் மேலும் 3 பேர் கொவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களாக இனங்காணப்பட்டுள்ளார்கள்.

இதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59 ஆக அதிகரித்துள்ளதோடு, தற்போது மொத்தமாக 15 வைத்தியசாலைகளில் 243 பேருக்கு வைத்திய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை இன்று இதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களாக 9 பேர் அடையாளங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி குணமடைந்த சீன பெண் உட்பட இலங்கையில் மொத்தமாக 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.