டெங்கு கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது டெங்கு நுளம்புகள் காணப்பட்ட  இடங்களை பராமரித்து வந்த 392 பேரின் மீது வழக்கு பதிவு செய்ய தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த சோதனை நடவடிக்கையானது 18 ஆம் திகதியிலிருந்து ஆரம்பிக்கப்பட்டு 3 நாட்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, டெங்கு நுளம்புகள் காணப்பட்ட 1459 இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த நபர்களில் 1771 பேருக்கு அறிக்கைகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வருடத்தில் கொழும்பில் 6009 டெங்கு நோயாளர்களும் கம்பஹாவில் 1983 நோயாளர்களும் இதுவரை இனங்காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.