(எம்.மனோசித்ரா)

கொரோனா வைரஸ் பரவலின் பாரதூரத்தன்மையை அறிந்து தேர்தலை ஒத்திவைப்பதற்கான தீர்மானத்தை தேர்தல்கள் ஆணைக்குழு எடுக்கும் என்று எதிர்பார்ப்பதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

அத்துடன் தேர்தலை நடத்துவதற்கான சந்தர்ப்பம் இதுவல்ல என்பது தெரிந்திருந்தும் அரசியல்வாதிகள் இவ்விடயத்தில் அசமந்தமாக செயற்பட்டாலும் மக்களின் நலனுக்கான ஸ்தாபிக்கப்பட்ட தேர்தல்கள் ஆணைக்குழு அவர்கள் நலன்சார்ந்த தீர்க்கமானதொரு முடிவை எடுக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

தேசிய மக்கள் சக்தி சார்பில் இன்று கொழும்பில் வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.