கொரோனா தொற்று தொடர்பான உண்மையான தகவல்களை அறிய இலங்கை தொலைத் தொடர்புகள் ஆணைக்குழுவானது விசேட இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

கொரோனா தொற்று தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவும் பெய்யான செய்திகளிலிருந்து, மக்களை தெளிவுபடுத்தும் நோக்காகவே இந்த இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி குறித்த இலக்கங்களுடன் தொடர்புகொண்டு அனைவரும் கொரோனா தொடர்பான வைரஸ் தொடர்பான தெளிவான விளக்கங்களை பெற்றுக் கொள்ள முடியும்.

117/ 1999 : கொவிட்-19 தொடர்பான கேள்வி அல்லது உதவி

135 : கொவிட்-19 தொடர்பான அரசாங்க அறிவிப்புகள் மற்றும் முன்னெச்சரிக்கைகள்

1390 : கொவிட்-19 தொடர்பான தகவல்கள் மற்றும் வைத்திய உதவி