தமிழர் தரப்பின் தனி ஓட்டங்களும் குடுமிச்சண்டைகளும்

Published By: Digital Desk 3

19 Mar, 2020 | 11:20 AM
image

கொரோனா வைரஸ் தொற்று உல­க­ளா­விய ரீதியில் அதிர்­வலைகளை ஏற்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கையில் இலங்­கை­யிலும் அதன் தாக்கம் மெல்ல எட்­டிப்­பார்க்க ஆரம்­பித்­தி­ருக்­கின்­றது. இந்­நி­லையில், பாரா­ளு­மன்றத் தேர்தல் ஏப்ரல் 25ஆம் திகதி நடத்­து­வ­தற்கு திட்­ட­மி­டப்­பட்­டுள்ள சூழலில் அது நடை­பெ­றுமா இல்­லையா என்­ப­தற்­கான பதிலை அடுத்து வரும் நாட்கள் தான் தீர்மா­னிக்­க­வுள்­ளன.

புறச்­சூ­ழ­மை­வுகள் இவ்­வா­றி­ருக்க, பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்­காக அர­சியல் கட்­சி­களின் கூட்­ட­ணி­களும் ஆசன ஒதுக்­கீ­டு­களும் வேட்­பு­ம­னுக்கள் தயா­ரிக்கும் செயற்­பா­டு­களும் முழு­வீச்­சுடன் இடம்­பெற ஆரம்­பித்­துள்­ளன.

நாட்டின் ஆட்­சி­ய­தி­கா­ரத்தில் மாறி­மாறி இருந்­து­வந்த ஐக்­கிய தேசியக் கட்­சியும் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக் ­கட்­சியும் தேசிய அர­சி­யலில் தட­மற்றுச் செல்லும் நிலை­மை­களே உரு­வா­கி­யுள்­ளன.

ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக் ­கட்­சி­யா­னது தனது தனிப்­பட்ட அந்­தஸ்தை விட்­டுக்­கொடுத்து பொது­ஜ­ன­ பெ­ர­மு­ன­வுடன் ஏறக்­கு­றைய சங்­க­மிக்கும் நிலை­மையே ஏற்­பட்­டுள்­ளது.

அவ்­வா­றி­ருக்­கையில், ஜனா­தி­பதி கோத்­தா­ப­யவின் தரப்பு, பிர­தமர் மஹிந்­தவின் தரப்பு, பசில், நாமல் ராஜபக் ஷ தரப்­புகள், ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் எஸ்.பி.தி­ஸா­நா­யக்க, திலங்க சும­தி­பால, டிலான் பெரேரா உள்­ளிட்­ட­வர்­களை கொண்ட அணி, அக்­கட்­சியின் தலைவர் மைத்­தி­ரியை மைய­மாகக் கொண்ட அணி, அத­னை­விட பொது­ஜ­ன­ பெ­ர­மு­னவின் பங்­கா­ளிகள் என்று பல அணிகள் காணப்­ப­டு­கின்­றன. இவ்­வாறு பல அணிகள் காணப்­ப­டு­வதால் ஆசனப் பகிர்வில் இன்­னமும் பிச்சல் பிடுங்­கல்கள் நீடித்த வண்­ணமே இருக்­கின்றன.  

இந்த அணியின் நிலைமை இவ்­வா­றி­ருக்க, மறு­பக்­கத்தில் பழம்­பெரும் கட்­சி­யொன்ற பதி­வினைக் கொண்­டி­ருக்கும் ஐக்­கிய தேசியக் கட்சி இரு­ கூ­று­க­ளா­கி­விட்­டது. ஐக்­கிய தேசியக் கட்­சியின் பெயரில் ரணில் அணி யானைச் சின்­னத்­திலும் ஐக்­கிய மக்கள் சக்தி என்ற பெயரில் சிறு­பான்மை தரப்­பு­களின் கைகோர்ப்­புடன் சஜித் அணி தொலை­பேசி சின்­னத்­திலும் கள­மி­றங்­கு­வ­தற்­கான தயார்ப்­ப­டுத்­தல்கள் நிறை­வ­டையும் தரு­ணத்­திலும் இருக்­கின்­றன. இத­னை­விட ஜே.வி.பி மற்றும் இதர சிங்­கள, பௌத்த சிந்­த­னையை மையப்­ப­டுத்­திய தரப்­பு­களும் தேர்­தல்­க­ளத்தில் குதிப்­ப­தற்கு தயா­ரா­கி­யுள்­ளன.

எவ்­வா­றா­யினும், தென்­னி­லங்­கையில் இம்­முறை நாற்­கோண போட்டி ஏற்­ப­டு­வ­தற்­கான வாய்ப்­புகள் அதி­க­ரித்­துள்ள நிலையில், யார் சிங்­கள பௌத்­த­வாதத்தில் உச்ச பற்­றா­ளர்கள். அதா­வது யார் கடும்­போக்கு சிங்­கள பௌத்த தேசிய பற்­றா­ளர்கள் என்­பதை வெளிப்­ப­டுத்­து­வதை அடி­யொற்­றி­ய­தா­கவே பிரசாரங்கள் அமை­ய­வுள்­ளன.

இத­னை­வி­டவும், பிள­வு­பட்ட தரப்­புகள் மீது சேற­டிப்­பு­களும் விமர்­ச­னங்­களும் அரச எதிர்ப்பு வாதமும் வழ­மை­போன்றே தேர்தல் மேடை­களில் எதி­ரொ­லிக்கும். இவற்­றுக்கு மேல­தி­க­மாக ராஜபக் ஷ மற்றும் அவர்கள் சார்ந்த தரப்­பினர் கடந்த காலத்தில் உப­யோ­கித்து வந்த ஜெனீவா மனித உரி­மைகள் பேரவை, அர­சாங்­கத்­துக்கு எதி­ரான சர்­வ­தேச அழுத்­தங்கள், இலங்கை இரா­ணு­வத்­துக்கு எதி­ரான சர்­வ­தேச போர்க் குற்­றச்­சாட்­டுகள், போர் வெற்றி ஆகிய சுலோ­கங்­களை அதே­பா­ணியில் முழு­வீச்­சாக பயன்­ப­டுத்த முடி­யாத நிலை­மையே இருக்­கின்­றது.

இருப்­பினும் இரா­ணு­வத்­த­ள­பதி சவேந்­திர சில்­வா­வுக்கு எதி­ரான அமெ­ரிக்­காவின் தடை அறி­விப்பு, ஜெனீவா மனித உரி­மைகள் பேரவை தீர்­மா­னத்­தி­லி­ருந்து வெளி­யே­று­வ­தாக மார்ச் மாத கூட்­டத்­தொ­டரில் அர­சாங்­கத்­தினால் விடுக்­கப்­பட்ட அறி­விப்பு ஆகி­யன ராஜபக் ஷ அணி­யி­ன­ருக்கு தென்­னி­லங்­கையின் வாக்­கு­களை அமோ­க­மாக அறு­வடை செய்­வ­தற்கு வழி­ய­மைக்­கப்­போ­கின்­றது.

தென்­னி­லங்கை நிலைமை இவ்­வா­றி­ருக்க, தமிழர் தாய­கத்தின் தேர்தல் களம் வழ­மை­போன்றே சூடு­பி­டிக்க ஆரம்­பித்­தி­ருக்­கின்­றது. திரு­வி­ழாக் ­காலங்கள் வரும் மணிக்­க­டைகள் போன்று ஆங்­காங்கே கட்சி அலு­வ­லகங்­களும் வர்ணக்­கொ­டி­களும் பதா­கை­க­ளையும் வெளிப்­ப­டை­யாக காண முடி­கின்­றது.

அதற்கும் அப்பால் கூட்­ட­ணி­க­ளுக்­கான இணக்­கப்­பா­டு­களும் ஆசன ஒதுக்­கீ­டு­க­ளுக்­கான பங்­கீட்டு பேச்­சு­வார்த்­தை­களும் நிறை­வுற்­ற­போதும் ஆச­னங்­க­ளுக்­கான நபர்­களை நியமிப்­ப­தற்­கான மூலோ­பாயத் திட்­டங்கள் வகுக்­கப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன.

குறிப்­பாக என்­று­மில்­லா­த­வாறு இனம், மதம் ஆகி­ய­வற்றை மையப்­ப­டுத்­திய வேட்­பா­ளர்கள் தெரி­வு­க­ளுக்கு தமிழ்த் தேசி­யப்­ ப­ரப்பில் உள்ள அத்­தனை கட்­சி­களும் முக்­கி­யத்­துவம் அளித்­துள்­ளன. அத­னை­வி­டவும் கடந்த பாரா­ளு­மன்­றத்தில் பிர­தி­நி­தித்­து­வத்­தினைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு போன்ற கட்­சிகள் ஏற்­க­னவே பாரா­ளு­மன்ற கதி­ரை­களை அலங்­க­ரித்­த­வர்கள் மீண்டும் அலங்­க­ரிப்­ப­தற்­கான அங்­கிகா­ரத்­தினை மீண்டும் பெறு­வ­தற்­காக புதிய வேட்­பா­ளர்கள் என்ற பெயரில் தத்­த­மது வாக்­கு­வங்­கி­களை தக்­க­வைத்­துக்­கொள்ளும் வகை­யி­லான தெரி­வு­களும் அறி­மு­கங்­களும் இடம்­பெ­று­கின்­றன.

தமிழ்த் தேசி­யப் ­ப­ரப்பில் உள்ள கட்­சி­களின் வேட்­பாளர் தெரிவில் இவ்­வா­றான நிலை­மைகள் இருக்­கையில், வழ­மைக்கு மாறாக இம்­முறை தமிழ்த் தேசியக் கட்­சி­க­ளுக்கு இடையில் முக்­கோணப் போட்டி ஏற்­பட்­டுள்­ளது. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு, விக்­னேஸ்­வ­ரனை முன்­னி­லைப்­ப­டுத்தும் தமிழ் மக்கள் தேசியக் கூட்­டணி, கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­ப­லத்­தினை தலை­மை­யாக கொண்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி ஆகி­ய­வற்­றுக்­கி­டையில் கடு­மை­யான போட்­டிகள் ஏற்­ப­டு­வ­தற்­கான வாய்ப்­பு­களே அதி­க­முள்­ளன.

இத­னை­வி­டவும் ஈழ­மக்கள் ஜன­நா­யக கட்சி, சமத்­துவம் சமூக நீதிக்­கான சமத்­துவ அமைப்பு, பிள்­ளையான், கருணா, வியா­ழேந்­திரன், விடு­தலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போரா­ளிகள் அணிகள் மற்றும் தேசியக் கட்­சிகள் என்று கள­மி­றங்கும் தரப்­பு­களின் பட்டியல் நீண்டு செல்­கின்­றது. அதிகளவு கட்­சிகள் தேர்­தல்­களில் கள­மி­றங்­கு­வது ஜன­நா­ய­கத்­த­ளத்தில் சிறந்­தது என்று கரு­தி­னாலும் மறு­பக்­கத்தில் இலங்கை தீப­கற்­பத்தில் சிறு­பான்மை தேசிய இனங்­களில் ஒன்­றாக இருக்கும் தமி­ழி­னத்தின் வாக்கு சித­றல்­க­ளுக்கே அது நிச்­ச­ய­மாக வழி­வ­குக்கும் என்­பதில் மாற்­றுக்­க­ருத்துக்கு இட­மில்லை.

இவ்­வா­றி­ருக்­கையில், தற்­போ­துள்ள விகி­தா­சாரத் தேர்தல் முறையின் பிரகாரம் ஒவ்­வொரு கட்­சியின் வேட்­பா­ளர்­களும் தாம் வெற்­றி­பெ­று­வ­தற்­கா­கவும் அதி­க­ளவு விருப்பு வாக்­கு­களை பெறு­வ­தற்­கா­கவும் பல்­வேறு யுக்­தி­களை கையி­லெ­டுப்­பார்கள். கட்­சியின் தலைவர் அல்­லது தொகு­தியின் பிர­தான அமைப்­பா­ளரை அல்­லது தனக்கு ஆச­னத்­தினைப் பெற்­றுக்­கொ­டுத்த நபரை முதன்­மைப்­ப­டுத்தி பதா­தைகள், துண்­டுப்­பி­ர­சு­ரங்­களை விநி­யோ­கித்து பிர­சா­ரங்­களை மேற்­கொள்­வார்கள்.

இன்னும் சிலரில் ஒருவர் முதல் மூவர் ஒன்­றி­ணைந்து வாக்கு சேக­ரிப்­பார்கள். விருப்பு வாக்­கு­க­ளையும் பகிர்ந்­த­ளிக்­கு­மாறு கோரு­வார்கள்.

அதிலும் ஒரு­சிலர் பதா­தைகள், துண்­டுப்­பி­ர­சு­ரங்­களில் மேற்­கூ­றி­ய­படி புகைப்­ப­டங்கள் காணப்­பட்­டாலும் தமக்கு தனி­யாக வாக்­க­ளிக்­கு­மாறே மக்­களை நேர­டி­யாகச் சந்­திக்கும் போது கோரு­வார்கள்.

அத்­த­கைய வேட்­பா­ளர்­களை தேர்தல் மொழியில் “தனி­யோட்டம் ஓடு­கின்­றார்கள்” என்று அழைப்­ப­துண்டு.

இவ்­வா­றான விட­யங்கள் தேர்­தல்­கால களத்தில் காணப்­ப­டு­வதும் பின்னர் ஒவ்­வொரு கட்­சி­க­ளி­னுள்ளும் அல்­லது கூட்ட­ணி­க­ளி­னுள்ளும் அது­பற்றி வாதப்­பி­ர­தி­வா­தங்கள் இடம்­பெற்று காற்­றோடு காற்­றாக மறைந்து விடு­வ­துமே வழ­மை­யாக இருக்­கின்­றது.

ஆனால் இம்­முறை தேர்­தல் ­க­ளத்தின் ஆரம்­பத்­தி­லேயே தமிழ்த் தேசியக் கட்­சி­களின் நிலைமை முற்­றிலும் மாறு­பட்­ட­தாக இருக்­கின்­றது.

குறிப்­பாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தாய்க்­கட்­சி­யான இலங்கை தமி­ழ­ர­சுக் ­கட்­சியின் நிலைமை மிக மோச­மாக உள்­ளது. குறிப்­பாக வடக்கின் யாழ்ப்­பாண மற்றும் வன்னி தேர்தல் மாவட்­டங்­களில் அத்­த­கைய மோச­மான நிலை­மையே நீடித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றது.

அத­ாவது, யாழ்.தேர்தல் மாவட்­டத்­தினை எடுத்­துக்­கொண்டால் தமி­ழ­ர­சுக்­கட்­சியின் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான ஸ்ரீதரன், மாவை, சுமந்­திரன், சர­வ­ண­பவன் ஆகிய நான்கு பேரும் தமக்­கென தனித்­த­னி­யாக நான்கு அணி­களை உரு­வாக்­கி­யுள்­ளனர்.

இந்த அணி­க­ளினுள் முன்னாள் மாகாண சபை உறுப்­பி­னர்கள், உள்­ளூராட்சி மன்ற உறுப்­பி­னர்கள் மற்றும் சில தீவிர ஆதர­வா­ளர்கள் ஆகியோர் உள்­ளீர்க்­கப்­பட்­டுள்­ளனர். இவர்கள் தலைவர் மாவை, தள­பதி சுமந்­திரன், சரா ஆமி, எங்­க­ளுக்­காக எங்­களில் ஒருவன் ஸ்ரீதரன் என்­றெல்லாம் சமூக வலைத்­த­ளங்­களில் கணக்­குகள் ஆரம்­பிக்­கப்­பட்டு அவ்வணி­க­ளுக்­குள்­ளேயே பொது­ வெ­ளியில் மோதல்கள் வேறு தொடர்கிறது.

இதனைவிட மக்கள் சந்திப்புகள், கேள்விக்கணைகளை தொடுங்கள் என்றெல்லாம் நிகழ்ச்சிகள் ஒழுங்கமைக் கப்பட்டு எதிர்த்தரப்புகளை சாடுவதை விமர்சிப்பதை விடவும் சொந்தக் கட்சிகளின் தலைமையையும் சக வேட்பாளரையும் திட்டமிட்டு சாட்டையடி அடிக்கும் துர்ப்பாக்கிய நிலைமைகளும் தொடர்கின்றன.

இவ்வாறான நிலைமைகள் தமிழ்த் தேசிய பரப்பில் உள்ள ஏனைய தரப்புகளான விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார், கிழக்கில் பிள்ளையான், வியாழேந்திரன் உள்ளிட்ட தரப்புகளிடத்தில் பெரியளவில் காணப்படவில்லை.

அவர்கள் மக்களின் அங்கீகாரத்தினை பெறுவதையே முதல் இலக்காக கொண்டிருப்பதால் இவ்வாறான உள்ளக குத்துவெட்டுக்கள் அதிகளவில் காணப்படவில்லை. ஆனால், தேர்தல்களம் அடுத்து வரும் நாட்களில் சூடுபிடிக்கின்றபோது “தனியோட்டங்கள்” நிச்சயமாக இடம்பெறும்.

ஆக, தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள கட்சிகளிடையேயும் அதன் வேட்பாளர்களிடையேயும் அதிகாரத்துக்கான போட்டிகள் உச்சத்தில் இருக்கின்றமையால் குடுமிச்சண்டைகள் இடம்பெறுகின்றதே தவிர தாம் சார்ந்த கொள்கைக்காவோ அல்லது ஆணை வழங்கப்போகும் மக்களுக்காகவோ அல்ல.

விடு­தலை எதிர்­பார்த்து ஏங்கி நிற்கும் தமி­ழினம் தனக்கு விடியலை வழங்­கு­வார்கள் என்ற நம்­பிக்­கையில் ஏதோ­வொரு தரப்­பி­ன­ருக்கு ஆணை வழங்­கத்தான் போகின்­றார்கள். ஆனால் அர­சியல் கட்­சி­களில் காணப்­படும் உள்­ளக குத்­து­வெட்­டுக்­களும் குடுமிச் சண்­டை­களும் அர­சியல் மீதும் அர­சி­யல்­வா­திகள் மீதும் வெறுப்­பினை ஏற்­ப­டுத்து­வ­தா­கவே இருக்­கின்­றது.

எனவே, தெற்­கா­சியா உட்­பட இலங்கை அர­சியல் கலா­சா­ரத்­துக்கே புதி­தாக  இருக்கும் கொள்கை ரீதி­யான தர்க்­கங்­களை பொது­வெ­ளியில் வைத்து வாக்­கு­களை சேக­ரிக்கும் அர­சியல் கலா­சாரம் பற்றி கொள்கை கொள்கை என்று மூச்­சுக்கு முந்­நூறு தட­வைகள் கூறும்  தமிழ்த் தேசி­யப்­ப­ரப்பில் உள்ள அர­சியல் கட்­சிகள் அனைத்தும் சிந்­திப்­பதே சாலப்­பொ­ருத்­த­மா­ன­தாக இருக்கும்.

இல்­லாது விட்டால் தமிழ்த் தேசிய அர­சியல் தொடர்ந்து இறங்கு முகத்தில் செல்­வ­தையும் சிங்­கள பௌத்­த­வாத அர­சியல் வல்­லா­திக்கம் பெறுவதையும் தவிர்க்க முடியாது போகும் அபாயகரமான சூழல் ஏற்படும் என்பதே நிதர்சனம்.

- ஆர்.ராம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29
news-image

ஒஸ்பெர்ஜர்'ஸ் சிண்ட்ரோம் எனும் குழந்தைகளுக்கான வளர்ச்சி...

2024-04-04 14:17:36