நாளாந்தம் மேற்கொள்ளும் நடைபயிற்சியை குறைத்துக் கொள்பவர்களுக்கு அல்லது தவிர்ப்பவர்களுக்கு ஒஸ்டியோஆர்த்திரைடிஸ் பாதிப்பு அதிகரிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

உலகம் முழுவதும் 240 மில்லியன் மக்கள் ஒஸ்டியோஆர்த்திரைடிஸ் என்ற மூட்டு வலியால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருக்கிறது. ஆண்களைவிட பெண்கள் அதிக அளவில் பாதிக்கப் பட்டிருக்கும் இந்த ஒஸ்டியோஆர்த்திரைடிஸ் என்ற பாதிப்பு உடலிலுள்ளஅனைத்து மூட்டுகளில் ஏற்பட்டாலும், கால் மூட்டு, கை விரல்கள் மூட்டுகள், இடுப்பு ஆகிய இடங்களில் வலி ஏற்படுவதன் மூலம் உணர்கிறார்கள்.

இதற்கு பேலன்ஸ் டயட் எனப் பரிந்துரைக்கப்படும் உணவு முறையை பின்பற்றுவதன் மூலமும், கொலஸ்ட்ரால் ஃபிரீ டயட் என்ற குறைவான கொழுப்பு சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலமும் இதற்கான நிவாரணத்தை பெற இயலும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஆனால் ஒஸ்டியோஒர்த்தரைடிஸ் நோய் பாதிக்கப்பட்டவர்கள் எக்காரணம் கொண்டும் தங்களது நடைபயிற்சியை குறைத்துக் கொள்ளக்கூடாது என்று அறிவுறுத்துகிறார்கள். மூட்டு வலியின் காரணமாகவோ அல்லது வேறு எதன் காரணமாகவோ நடைபயிற்சியை அல்லது நாளாந்த நடவடிக்கையான அத்தியாவசியமான நடப்பதை குறைத்தாலும் இத்தகைய பாதிப்பு அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கிறார்கள்

ஒஸ்டியோஆர்த்திரைடிஸால் பாதிக்கப்பட்டவர்கள் அதற்குரிய சிகிச்சையை மேற்கொள்வதுடன், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் பயிற்சியையும் தவறாது தொடரவேண்டும்.

டொக்டர் ராஜ் கண்ணா.
தொகுப்பு அனுஷா.