புத்தளம், சிலாபம் மற்றும் நீர்கொழும்பு கொச்சிக்கடை பொலிஸ் பிரிவுகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு உத்தரவு இன்று காலை 8.00 மணிக்கு நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

எனினும் ஊரடங்கு உத்தரவு மீண்டும் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும் என்றும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

புத்தளம், , சிலாபம் மற்றும் நீர்கொழும்பு கொச்சிக்கடை பொலிஸ் பிரிவுகளில் நேற்று மாலை 4.30 மணிக்கு இந்த ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.