நாடளாவிய ரீதியில் உள்ள தனிமைப்படுத்தல் முகாம்களில் 2,287 பேர்!

Published By: Vishnu

18 Mar, 2020 | 08:42 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

இத்தாலியலிருந்து இலங்கைக்கு வந்த ஒரு வயதும் 5 மாதங்களும் ஆன குழந்தை மற்றும் அதன் தாய் உள்ளிட்ட 50 பேர் தற்போது கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக உறுதி செய்யப்பட்ட நிலையில் அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். 

நேற்று புதிதாக அடையாளம் காணப்பட்ட 9 தொற்றாளர்களுடன் சேர்ந்து மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை இவ்வாறு 50 ஆக அதிகரித்துள்ளதாக  சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்  விஷேட வைத்திய நிபுணர் வைத்தியர் அணில் ஜாசிங்க கூறினார்.  

புதிதாக அடையாளம் காணப்பட்ட  கொரோன வைரஸ் தொற்றாளர்களில், 5 பேர் இத்தாலியில் இருந்து இருந்து வந்தவர்கள் எனவும் ஒருவர் இந்தியாவுக்கு சுற்றுலா சென்று வந்தவர் எனவும் ஏனைய மூவரும்   இங்கிலாந்திலிருந்து வந்தோருடன் தொடர்புபட்ட சுற்றுலா வழிகாட்டிகள் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.  

கொவிட் 19 எனப்படும் கொரோனா தொற்றை தடுப்பது தொடர்பிலான தேசிய நடவடிக்கை மையத்தில் இடம்பெற்ற விஷேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டே அவர் இதனைக் கூறினார்.  

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னி ஆரச்சி, கொரோனா தொற்றை தடுப்பது தொடர்பிலான தேசிய நடவடிக்கை மையத்தின் தலைவர் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனலார் சவேந்ர சில்வா,  சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க, பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

இன்று புதிதாக 9 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்று நாம் 15 தொற்றாளர்களை அடையாளம் கண்டதாக கூறிய போதும், அதில் சிறு தவறு உள்ளது. அதாவது இரு நபர்களை நாம் இரு முறை கணித்துள்ளோம். அதன்படி நேற்று அடையாளம் காணப்பட்ட 13 தொற்றாளர்களுடன் மொத்த எண்ணிக்கை 41 ஆகும். 

இன்று புதிதாக ஒன்பது பேர் அடையாளம்  காணப்பட்டனர். அதன்படி மொத்த கொரோனா தொற்றாளர்கள் 50 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டு சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளனர் என விஷேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க கூறினார்.

இதனிடையே நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்று சந்தேகத்தில் 212 பேர்  சிகிச்சைப் பெற்று வருவதாக விஷேட வைத்திய நிபுணர் அணில் ஜாசிங்க சுட்டிக்காட்டினார்.

இதனிடையே நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்டுள்ள 16 தனிமைப்படுத்தல், தொற்று நீக்கல் நடவடிக்கை தொடர்பிலான மருத்துவ கண்காணிப்பு முகாம்களில்  21 வெளிநாட்டவர்கள் உட்பட 2287 பேர் தற்போது கண்கானிப்புக்குட்படுத்தப்பட்டுள்ளதாக கொரோனா தொற்றை தடுப்பது தொடர்பிலான தேசிய நடவடிக்கை மையத்தின் தலைவர் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனலார் சவேந்ர சில்வா தெரிவித்தார்.

அவ்வாறு கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 19 பேருக்கு கொரோன தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் அவர்களில் 18 பேர் இத்தலியலிருந்து இருந்து வந்தோர் எனவும் மற்றையவர் பிரித்தனையாவிலிருந்து வந்தவர் எனவும் அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08