இலங்கையை மட்டுமன்றி, முழு உலகத்தையே ஆட்டிப்படைக்கும் கொடூர வைரஸ்தொற்றாக கொரோனா காணப்படுகின்றது.  

ஒவ்வொரு நாடுகளிலிருந்தும் கொரோனா குறித்த தேடல்களும், அனுபவங்களும், அறிகுறிகளும் பத்திரிகைகலிலும், சமூக ஊடகங்களிலும் பரவி வருகின்றது. 

அந்தவையில், பிளாஸ்டிக் மற்றும் துருப்பிடிக்காத செம்புகளின் வெளிப்பகுதிகளில் கொரோனா வைரஸ் 3 தினங்கள் இருக்கமுடியும் என்று புதிய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

 மேற்படி தகவலை New England Journal of Medicine என்ற சஞ்சிகை வெளியிட்டுள்ளது. வெளிப்புறத்தின் ஸ்திரத்தன்மை தொடர்பில் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வின் போது 2002 ஆம் ஆண்டு பரவிய SARS – CoV – 1 அல்லது SARS வைரசுடன் கொரோனா வைரசை ஒப்பிடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது கொரோனா வைரஸ் செம்பு பொருட்களில் 4 மணித்தியாலங்களும், காட்போட் பொருட்களில் 24 மணித்தியாலங்களும், பிளாஸ்டிக் மற்றும் துருப்பிடிக்காத இரும்பு பொருட்களின் வெளிப்பகுதியில் 72 மணித்தியாலங்களும் இருக்கக்கூடும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக கொரோனா வைரஸ் காற்றில் 3 மணித்தியால காலம் தங்கியிருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் என்பது மிருகங்கள் மத்தியில் பெருமளவில் காணப்படும் வைரஸ் குழுமத்தைச் சேர்ந்ததாகும். விஞ்ஞானிகளினால் இது ஸுனோடிக் (Zoonotic) என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இது மிருகங்கள் ஊடாக மனிதர்களுக்கு தொற்றக்கூடுமெனவும்  தெரிவித்துள்ளனர். 

இந்த ஆய்வுகள் மூலம் கொரோனா வைரஸ் சில மணித்தியாலங்கள் தொடக்கம் ஒரு வார காலத்திற்கு மேற்பட்ட காலம் சுற்றாடல் பகுதிகளில் இருக்கக்கூடும் என்று கண்டறியப்பட்டுள்ளது.