வடக்கை அபிவிருத்தி செய்து முன்னேற்றப் பாதையில் பயணிக்க மக்கள் ஆதரவு வேண்டும் என ஜக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.

வேட்பு மனுவை கையளித்த பின்னர் ஊடகற்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இதனைத் தெரிவித்தார்

அவர் அங்க மேலும் கருத்து தெரிவிக்கையில்,

2020 ஆண்டுக்கான பாராளுமன்றத் தேர்தலுக்காக ஜக்கிய தேசியக் கட்சி சார்பாக முன்றாவது தடைவையாக போட்டியிடுகின்றேன் கடந்தகாலங்களில் ஜக்கிய தேசியக்கட்சியின் ஆட்சியில் தான் மக்களுக்கு விடீவு எற்பட்டது எனையவர்களின் ஆட்சியில் எமது மக்கள் சின்னாபின்னமாக்கப்பட்டுள்ளனர். கடந்தகால ஆட்சியில் அதாவது ஜக்கியதேசிய முன்னணி அரசாங்கத்தின் ஆட்சியால்தான் நாட்டில் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. 

இதனை அனைவரும் அறிவார்கள் அபிவிருத்தி மட்டுமன்றி அரசியல் தீர்வுக்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டது அதனை குழப்பும் விதத்திலே மகிந்த ராஜபக்ஷ தமையிலான குழுவினர் குழப்பிவித்தனர் இத்தகைய நிலையிலே இந்த பாராளுமன்றதேர்தல் இடம்பெறவுள்ளது.

நாங்கள் பாராளுமன்றம் சென்று எமது மக்களுக்காக வேலை செய்ய வேண்டும் நாம் செல்லாது விட்டால் மாற்று அணியினர் சென்று எமது பகுதிக்கான அபிவிருத்தியை தடுத்துவிடுவார்கள் கடந்தகாலத்தில் ஆட்சிசெய்த மகிந்த குழுவினர் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.

 அவர்களது ஆட்சியில் நாங்கள் நடமாடாத நிலை ஏற்பட்டது இந்த நிலை மீண்டும் ஏற்படவேண்டுமா வெளிநாட்டில் இருப்பவர்கள் செந்தநாட்டிற்கு வரமுடியாத நிலை செந்த நாட்டிற்கு வந்தால் திரும்பிசெல்ல முடியாத நிலை இருப்பதாக கூறுகிறார்கள் இந்த நிலை தேவையா என மக்கள் சிந்திக்கவேண்டும்.

எனது கணவர் அமரர் மகேஸ்வரன் பாதையில் தெரடர்ச்சியாக பயணிக்க எனது சேவை தொடர எனது அணிக்கு வாக்களித்து வெற்றி பெறவைக்க வேண்டும் என்றார்.